/* */

குலசை தசரா விழாவுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு...!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவுக்கு செல்லும் பக்தர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

குலசை தசரா விழாவுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு...!
X

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை இரவு 12 மணிக்கு நடைபெறுகிறது. தனையடுத்து 25.10.2023 அன்று கொடியிறக்க நிகழ்ச்சியுடன் இந்தத்திருவிழா நிறைவு பெறும்.

திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பு வசதியையும் கருத்தில் கொண்டு பல்வேறு போக்குவரத்து மாற்றம் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டக் காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகளை தெரிந்து கொள்வோம்:

  • கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்ற உலோகத்திலான எந்த பொருட்களையும் கொண்டு வருதல் கூடாது.
  • அருள்மிகு முத்தாரம்மன் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கடவுள் சம்மந்தப்பட்ட படங்களை பக்தியோடு கொண்டு வருவதற்கோ அல்லது பயன்படுத்தவதற்கோ, பக்தி பாடல்களை இசைப்பதற்கோ, கடவுள் சம்மந்தப்பட்ட பனியன்கள் மற்றும் உடைகளை அணிந்து வருவதற்கோ எவ்வித தடையும் இல்லை.
  • கடவுள் திருவிழாவில் ஜாதி சின்னங்களுடன் கூடிய கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ, ஜாதி ரீயான உடைகளை அணிந்து வரவோ, காவல்துறையினரைப் போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ எந்தவித அனுமிதியுமில்லை.
  • அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்வதற்கோ, நடனம் ஆடுவதற்கோ, அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பி சுற்றுச் சூழலுக்கு பங்கம் ஏற்படுத்துவதற்கோ, ஜாதி சம்மந்தமான கோஷங்கள் மற்றும் இசை ஏற்படுத்துவதற்கோ எவ்வித அனுமதியும் கிடையாது.
  • எந்தவித ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோ, ஆபாச நடனமோ நடத்தக் கூடாது, மீறினால் சம்மந்தப்பட்ட இசைக்குழுவினர் மற்றும் அமைப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தசரா குழுக்கள் முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது அவ்விடத்தில் அதிக நேரம் நிறுத்தி கொண்டு வாண வேடிக்கைகள் நடத்தவோ, நன்கொடை பெறவோ, இசைக் கருவிகளை இசைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது.
  • பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு காப்பு கட்டியிருக்கும் பக்தர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோவிலிலேயே காப்பு கயிறுகளை அவிழ்த்து கொள்ளலாம்.
  • கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும் மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும், வாகனங்கள் வரும் வழிப்பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், தசரா குழுக்கள் வரும் வழி, பக்தர்கள் வரும் வழி, கோவில் வளாகம், கடற்கரை பகுதி, பக்தர்கள் வெளியே செல்லும் வழி ஆகிய அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையணிந்த ஆண், பெண் கவலர்களை நியமித்து தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Updated On: 23 Oct 2023 5:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்