இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
X

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்.

தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதேபோல, இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை மீனவர்களையும் கடலோர காவல் படையினர் கைது செய்வது வழக்கம்.

இந்த நிலையில், இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்கு சொந்தமான ஆதேஷ் என்ற ரோந்து கப்பல் நேற்று மாலை கன்னியாகுமரி கடல் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது, இலங்கை கடற்பகுதியில் இருந்து 50 கடல் மைல் கடந்து சர்வதேச கடல் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஒரு படகு நுழைந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அத்துமீறி நுழைந்த படகை கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்தனர். அது, இலங்கையைச் சேர்ந்த ஒரு மீன்பிடி படகு என தெரியவந்தது. உடனே, கடலோர காவல் படையினர் அந்தப் படகில் இறங்கி சோதனை செய்தனர்.

அதில் இலங்கை பெருவளை பகுதியைச் சேர்ந்த முகமது, ரூவான், பிரகித், மதுரங், அப்துல், ரகுமான் என ஆறு மீனவர்கள் இருப்பது தெரிய வந்தது. இதையெடுத்து அவர்களை கைது செய்த கடலோர காவல் படையினர் இன்று மாலை தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

கைது செய்யப்பட்ட ஆறு இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்கள் வந்த படகை கொண்டு வந்து தருவைக்குளத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களிடம் மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸார், க்யூ பிரிவு போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வந்த இலங்கை மீனவர்கள் காற்றின் வேகத்தால் வழி தவறி வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் கடத்தலில் ஈடுபட வந்தார்களா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 20 March 2023 2:35 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கொள்ளையின் போது சுடப்பட்ட நாய் 3 அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
  3. தொழில்நுட்பம்
    புதிய ரியாலிட்டி ஹெட்செட் ‘விஷன் ப்ரோ’: ஆப்பிள் நிறுவனம் அறிமுகம்
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத் தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
  5. நாமக்கல்
    தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 52 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர்...
  6. சினிமா
    இந்த உடையில் யாரு சூப்பர்? அதிதி ராவ் ஹிடாரி Vs ராஷ்மிகா மந்தனா!
  7. தமிழ்நாடு
    டெல்டா பாசனம்: ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்...
  8. நாமக்கல்
    வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
  9. நத்தம்
    திண்டுக்கல்லில் புகார் பதிவு மையம்: அமைச்சர் பெரியசாமி திறப்பு
  10. விளையாட்டு
    காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் ஆடிய வெங்கடேஷ் ஐயர்! வைரலாகும் வீடியோ!