/* */

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: தூத்துக்குடி எஸ்பி, மாநகராட்சி ஆணையர் ஆய்வு

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று மனுதாக்கல் தொடங்கும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி எஸ்.பி, மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: தூத்துக்குடி எஸ்பி, மாநகராட்சி ஆணையர் ஆய்வு
X

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர்,  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று, வேட்புமனு தாக்கல் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்வதை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் 3 ஆய்வாளர்கள் தலைமையில் 45 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வேட்பு மனு படிவங்கள் பெறுபவர்கள் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் மட்டுமே மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். வேட்பு மனு தாக்கல் சம்மந்தமான அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டிகள் அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 15 துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 18 டவுன் பஞ்சாயத்துக்கள் உள்ளன. அனைத்து வேட்பு மனுதாக்கல் செய்யும் இடங்களில் ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்த ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள் உட்பட காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 28 Jan 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்