/* */

மாமன்னன்:தூத்துக்குடி தியேட்டரில் தகராறு செய்த தி.மு.க. வினர் மீது வழக்கு

தூத்துக்குடியில் மாமன்னன் படம் பார்க்கும்போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக திமுக வினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

மாமன்னன்:தூத்துக்குடி தியேட்டரில் தகராறு செய்த தி.மு.க. வினர் மீது வழக்கு
X

தூத்துக்குடியில் திரையரங்கு உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட தி.மு.க.வினர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த 29 ஆம் தேதி வெளியான மாமன்னன் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் தி.மு.க. நிர்வாகிகள் தியேட்டர்களுக்கு சென்று பார்த்து விட்டு வருகின்றனர். அதன்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் கடந்த 2 ஆம் தேதி இரவு 6.30 மணி காட்சியில் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் நிர்வாகிகளுடன் மாமன்னன் திரைப்படத்தை பார்த்தார்.

அப்போது, அமைச்சர் கீதாஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் மாமன்னன் திரைப்படத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து, 10.30 காட்சியிலும் தி.மு.க.வினர் சிலர் படம் பார்க்க முடிவு செய்து உள்ளனர். ஆனால், குறிப்பிட்ட சிலர் மட்டுமே டிக்கெட் எடுத்துள்ளனர்.

தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அமைச்சர் கீதா ஜீவன் பெயரை பயன்படுத்தி தி.மு.க. பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகி வில்சன் ஆகியோர் தலைமையிலான தி.மு.க.வினர் அமைச்சர் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படத்தை இரவு 10.30 மணி காட்சியில் டிக்கெட் ஏதும் எடுக்காமல் பார்த்ததுடன் பட இடைவேளையின் போது பணம் ஏதும் கொடுக்காமல் பாப்கான் கேட்டு திரையரங்க ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த மத்திய பாகம் காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினரிடம் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் காவல்துறையை மிரட்டும் தொணியில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து மத்திய பாகம் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவதூறான வார்த்தைகளை பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தி.மு.க. பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகி வில்சன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் போலீசாருடனும், திரையரங்க உரிமையாளருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம காணும் வகையில், திரையரங்கில் உள்ள சிசிடிவி காட்சிகள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றைக் கொண்டு மற்ற திமுக நிர்வாகிகளையும் வழக்கில் சேர்க்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தை பார்க்கச் சென்று தி.மு.க. நிர்வாகிகளே திரையரங்க உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடமும், காவல் துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 4 July 2023 6:34 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்