/* */

''நான் நடிகனாகவதற்கு காரணம் எனது ஆசிரியர்கள் தான்'' - நடிகர் காளிவெங்கட் நெகிழ்ச்சி

தனது நடிப்புக்கான தேவையான விஷயங்களை தனது பள்ளியில் இருந்து தான் பெற்று வருவதாக நடிகர் காளிவெங்கட் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நான் நடிகனாகவதற்கு காரணம் எனது ஆசிரியர்கள் தான் - நடிகர் காளிவெங்கட் நெகிழ்ச்சி
X

நடிகர் காளிவெங்கட். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இதில் இப்பள்ளியில் முன்னாள் மாணவரும், முண்டாசுபட்டி, மாரி, ராஜாமந்திரி உள்ளி பல்வேறு திரைப்படங்களில் நடித்த குணச்சித்ர மற்றும் நகைச்சுவை நடிகருமான காளிவெங்கட் கலந்து கொண்டார். அங்குள்ள பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடன் பயின்ற நண்பர்கள் மற்றும் அப்பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் அங்கு நடைபெற்ற ஆசிரியர்கள் தின விழாவில் நடிகர் காளிவெங்கட் கலந்து கொண்டு பேசுகையில் ஆக்சன் என்று கூறினால் நடித்து விடலாம், ஆனால் பேசுவது மிகவும் சிரமமான விஷயம். தான் தற்பொழுது நின்று பேசுவது தான் 8ம் வகுப்பில் படித்த வகுப்பறை என்றும், அங்கு நின்று பேசுவது மகிழச்சியாக உள்ளது. தனது கலைச்சேவைக்கான வேர் இப்பள்ளியில் இருந்தது தான் தொடங்கியது. 8 வகுப்பு படிக்கும் போது தனது நண்பர் சக்திரபிரகாஷ்வுடன் சேர்ந்து மேஜையில் தட்டி பாடல்களை பாடுவது வழக்கம்.

இந்த சூழ்நிலையில் சண்முகசுந்தரி என்ற ஆசிரியை நமது பள்ளியில் கிராமிய பாடல்கள் பாடுவதற்கு யாரூம் இல்லையா என்று கேட்ட போது, தனது நண்பர் சக்திரபிரகாஷ் எனது கையை பிடித்து உயர்த்தி காண்பித்தார். இதையெடுத்து ஆசிரியை சண்முகசுந்தரி எனக்குள் இருந்த கூச்சத்தினை உடைத்து, என்னை பாட வைத்து, கைதட்டல் வாங்கி கொடுத்தார். மேலும் நாலாட்டின்புதூரில் கலைஇலக்கிய போட்டியில் கலந்து கொண்டு 2வது பரிசு பெற்றேன். அதில் பெற்ற கைதட்டல்கள் தான் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளதாகவும், தனக்கு பாடம் எடுத்த சேதுராஜ் என்ற ஆசிரியர் படிப்பு என்பது எழுதுவது, மனப்பாடம் செய்வது கிடையாது, பாடல், கதை என இலக்கியத்துடன் கூடியது என்பார்.

நடிப்பு துறையினை தேர்ந்தெடுக்க காரணமாக இருந்தது ஆசிரியர்கள் தான். படிப்பு என்பது கலை இலக்கியம் மற்றும் வாழ்க்கையுடன் இணைந்தது என்று கூறி ஆசிரியர்கள் தன்னை உருவாக்கியதாகவும், இங்கு படித்த மாணவர்களுக்கு இந்த பள்ளி எப்படி தொடர்புடன் இருப்பதாக தெரியவில்லை, ஆனால் தனக்கு தினமும் தான் படித்த பள்ளியுடன் தொடர்பு இருப்பதாகவும், படித்த பள்ளியில் இருந்து தான் நடிப்புக்கு தேவையான விஷயங்களை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் தனது நண்பர்களுடன் நடந்த விஷயங்களையும் நினைவுபடுத்தி பகிர்ந்து கொண்டார். நடிகர் காளி வெங்ட்டிற்கு சொந்த ஊர் கழுகுமலை அடுத்துள்ள கூழைத்தேவன்பட்டி என்பது குறிப்பிடதக்கது. இப்பள்ளியில் 10வகுப்பு வரை படித்துள்ளார்

நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சீதா மகேஸ்வரி, ஆசிரியர் பொன்ராஜ், திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன், திமுக நகர செயலாளர் கிருஷ்ணக்குமார் மற்றும் பள்ளியில் படித்த பழைய மாணவர்கள்; கலந்து கொண்டனர்.

Updated On: 5 Sep 2021 2:46 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்