/* */

கோவில்பட்டி டாஸ்மாக் கடையில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு.. 2 பேர் கைது...

கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டி டாஸ்மாக் கடையில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு.. 2 பேர் கைது...
X

டாஸ்மாக் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தாக கைது செய்யப்பட்ட விக்ரம் மற்றும் ஆனந்த்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முத்துலாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் கடந்த 18-11-2022 அன்று இரவு 10 மணி அளவில் சூப்பர்வைசர் ஐயப்பசாமி மற்றும் ஊழியர் கருப்பசாமி ஆகிய இருவரும் பணியில் இருந்தனர்.

பணியை முடித்துக் கொண்டு அவர்கள் கடையில் இருந்து கிளம்பும்போது திடீரென முகமுடி அணிந்து கையில் பட்டாக்கத்தியுடன் கடைக்குள் புகுந்த இருவர், டாஸ்மார்க் கடையில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து டாஸ்மார்க் சூப்பர்வைசர் ஐயப்பசாமி எட்டையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், டாஸ்மார்க் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த விக்ரம் என்ற விக்கி (வயது 22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்ற அசோக் (வயது 29) ஆகிய இருவரும் பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, விக்ரம் மற்றும் ஆனந்தை எட்டையாபுரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான அசோக் மீது வழிப்பறி, கொலை முயற்சி, திருட்டு உட்பட தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் 29 வழக்குகளும், விக்ரம் என்ற விக்கிக்கு பல்வேறு காவல் நிலையங்களில் 5 வழக்குகளும் ஏற்கெனவே நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, கைதான விக்ரம் மற்றும் ஆனந்த் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 25 Jan 2023 2:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு