கோவில்பட்டியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய பொறியாளர் கைது...

கோவில்பட்டியில் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோவில்பட்டியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய பொறியாளர் கைது...
X

கோவில்பட்டியில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட மின்வாரிய இளநிலை பொறியாளர் பொன்ராஜா.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பாரதிசங்கர். இவர், தனது நிலத்தின் வழியாக செல்லும் மின்சார வயரை வேறு இடத்தின் வழியாக கொண்டுச் செல்லும்படியும், நிலத்தில் உள்ள மின்கம்பத்தை மாற்றித் தருமாறும் நாலாட்டின்புதூரில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தார்.

அவரது விண்ணப்பத்தை கணினியில் பதிவேற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், தனக்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வரும் பொன்ராஜா தெரிவித்துள்ளார்.

பணம் கொடுக்க விரும்பாத பாரதிசங்கர் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தாராம். இதைத்தொடர்ந்து, போலீஸார் தெரிவித்த ஆலோசனையின் படி பாரதிசங்கர் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகளை இளநிலை பொறியாளர் பொன்ராஜாவிடம் இன்று வழங்கி உள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்து கவனித்த லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீஸார் பொன்ராஜாவை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மின்வாரிய இளநிலை பொறியாளர் பொன்ராஜாவை விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவே ஆகும். அரசு அலுவலர்கள் தங்கள் பணியை செய்வதற்கு லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் பொதுமக்கள் புகார் செய்யலாம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Updated On: 2023-01-26T13:12:02+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...