/* */

கோவில்பட்டியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது: 6 பைக்குகள் பறிமுதல்

கோவில்பட்டி பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது; 6 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கோவில்பட்டியில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது: 6 பைக்குகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுடன் முத்துராஜ்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடு போனதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதய சூரியன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையில் உதவி ஆய்வாளர் அரிகண்ணன், தலைமைக் காவலர்கள் மணிகண்டன், அமல்ராஜ், முதல் நிலைக் காவலர் பாண்டியராஜன், காவலர்கள் சரவணன், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரியை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார்‌.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல் மாவட்டம் கும்பம்பட்டி, மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் முத்துராஜ் (31) என்பவர் தொடர் சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளையரசனேந்தல் பகுதியில் வைத்து மேற்படி தனிப்படையினர் எதிரி முத்துராஜாவை கைதுசெய்து அவரிடம் இருந்த திருடப்பட்ட 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் முத்துராஜ் மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளும், திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் வேறு எங்கெங்கு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட முத்துராஜை கண்டுபிடித்து கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்

Updated On: 2 Oct 2021 5:43 PM GMT

Related News