/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேர் மீது குண்டர் சட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான 13 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேர் மீது குண்டர் சட்டம்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் பொறுப்பேற்ற பிறகு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 28.08.2023 அன்று தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர்பாண்டியாபுரம் சுங்கசாவடி அருகே இரண்டு கார்களில் 228 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில், தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவநாயர் காலனியை சேர்ந்த ஆரோன் (31), தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்த இசக்கி கணேஷ் (29), கடலூர் மாவட்டம் தேவானம்பட்டினம் பகுதியை சேர்ந்த சரவணன் (45), தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர்களான ராஜா (30), அருண்குமார் (27), காளீஸ்வரன் (24), விக்னேஷ்வரன் (29), திருமேனி (29), கன்னியாகுமரி மாவட்டம் இணையம் பகுதியை சேர்ந்த சஜின் ரெனி (35), தூத்துக்குடி வி.எம்.எஸ் நகரை சேர்ந்த திருமணிகுமரன் (27), சென்னை புனித தாமஸ் மவுண்ட் பகுதியை சேர்ந்த தயாளன் (45), சாத்தான்குளம் ஆசிர்வாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (39) சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சம்பத்குமார் (50) மற்றும் சிலரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து 228 கிலோ கஞ்சாவும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் கைதான ஆரோன், இசக்கி கணேஷ், சரவணன், ராஜா, சஜின் ரெனி, திருமணிகுமரன், அருண்குமார், தயாளன், மணிகண்டன், காளீஸ்வரன், விக்னேஷ்வரன், திருமேனி மற்றும் சம்பத்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், கஞ்சா வழக்கில் கைதான ஆரோன், இசக்கி கணேஷ், சரவணன், தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர்களான ராஜா, அருண்குமார், காளீஸ்வரன், விக்னேஷ்வரன், திருமேனி, கன்னியாகுமரி மாவட்டம் இணையம் பகுதியை சேர்ந்த சஜின் ரெனி, தூத்துக்குடி வி.எம்.எஸ் நகரை சேர்ந்த திருமணிகுமரன், சென்னை புனித தாமஸ் மவுண்ட் பகுதியை சேர்ந்த தயாளன், சாத்தான்குளம் ஆசிர்வாதபுரத்தை சேர்ந்த மணிகண்டன், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சம்பத்குமார் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.

இதையெடுத்து, கைதானவர்களில் ஆரோன் மதுரை மத்திய சிறையிலும், மற்ற 12 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு முன்னிலையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேரும், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 பேரும் என மொத்தம் 137 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Sep 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  4. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  5. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  6. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  8. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  9. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...