/* */

வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு நடைபெறும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆய்வு
X

தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில், மூன்று தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்வு மையங்களில் ஒன்றான புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெறும் வகுப்பறைகளை நேரில் பார்வையிட்ட பிறகு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் இன்றைய தினம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக வட்டார கல்வி அலுவலருக்கான தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் பி.எம்.சி. பள்ளி, புனித மரியன்னை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பள்ளி ஆகிய 3 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்விற்கு 944 பேர் விண்ணப்பித்ததில் இன்று 773 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்வை கண்காணிப்பதற்காக மாநில அளவில் கல்வித்துறை குழுவை அமைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் இந்தப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறோம்.

நமது மாவட்டத்தில் உள்ள 3 தேர்வு மையங்களிலும் தேர்வு சுமூகமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஒரு தலைமையாசிரியரை மையக் கண்காணிப்பாளராக நியமித்துள்ளோம். மொத்தம் 48 அறைகளில் 944 பேருக்கு தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பாளராக ஆசிரியர்களை நியமித்துள்ளோம். தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் அனைத்தும் காவல்துறை பாதுகாப்புடன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்படும். இன்று மாற்றுத்திறானளிகள் 12 பேரும் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்கும் எல்லா வசதிகளும் செய்துள்ளோம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Updated On: 10 Sep 2023 7:04 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  7. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  9. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!