முதல்வரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
முதல்வரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
X

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா என்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்பது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களை தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தக்கூடிய நிகழ்வாகும்.

அந்த நல்ல வாய்ப்பை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறந்தள்ளி இருப்பது வேதனைக்குரியது. வருத்தத்திற்குரியது. தாங்கள் சார்ந்து இருக்கும் நாடாளுமன்ற தொகுதி மக்கள் அந்த உறுப்பினர்களை புறக்கணிக்கும் நிலை ஏற்படும். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் என்பது தொலைநோக்கு திட்டமாகும்.

அதில் தமிழகத்திற்கு தனிச்சிறப்பு வரலாற்று சிறப்புமிக்க செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நேர்மை தவறாமல் நெறி பிறளாமல் செயல்படுவர். அரசியல் காரணங்களுக்காக செங்கோல் வைக்கப்பட்டது குறித்து தெரிந்தும், தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் கொடுப்பது மக்களால் நிராகரிக்கப்பட்டுவிடும்.

காவிரி தண்ணீர் பிரச்னை டெல்டா மக்களுக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கு பயிர் பிரச்னை என்பது மட்டுமல்ல உயிர் பிரச்சனை. மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று பதவியேற்ற 10 நாட்களுக்குள் காங்கிரஸ் அரசு கூறியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும். அணை கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வரின் வெளிநாடு பயணம் என்பது விளம்பரத்திற்காக மட்டுமாக இருந்துவிடாமல், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிகழ வேண்டும். அது வெளிப்படையாக இருக்க வேண்டும் என ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

Updated On: 1 Jun 2023 1:26 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...
  3. மணப்பாறை
    திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை...
  4. காஞ்சிபுரம்
    மகளிர் மகப்பேறு திட்டத்தில் 2 ஆண்டு ஆகியும் பணம் வரவில்லை என...
  5. பெருந்துறை
    மரவள்ளி கிழங்கு வாரியம் அமைக்க வேண்டும்:விவசாயிகள் வலியுறுத்தல்
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஜவுளி சந்தை
  7. ஈரோடு மாநகரம்
    ஈரோடு மாவட்டத்தில் 42 கிராமங்களில் வேளாண் வளர்ச்சி திட்டம்
  8. கோவில்பட்டி
    காற்றாலை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
  9. கோவில்பட்டி
    தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
  10. வாசுதேவநல்லூர்
    தென்காசி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா