தூத்துக்குடியில் 4 ஆண்டுகளாக தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி கைது

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதாகி பரோலில் வந்து நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தூத்துக்குடியில் 4 ஆண்டுகளாக தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி கைது
X

கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதி சண்முகையா.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கச்சேரி தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் சண்முகையா (57). இவர், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 38 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1985 ஆம் ஆண்டு ஆதாயத்திற்காக காளியப்பபிள்ளை என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், சண்முகையாவுக்கு 25.04.1990 அன்று கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதையெடுத்து, சண்முகையா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சிறையிலிருந்த சண்முகையா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து 24.07.1992 அன்று ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சண்முகையாவிற்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்ததன் அடிப்படையில் கடந்த 14.07.2000 அன்று மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சண்முகையா அடைக்கப்பட்டார்.

21 ஆண்டுகளாக சிறையில் இருந்த கைதி சண்முகையா, தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என கடந்த 15.01.2019 முதல் 20.01.2019 வரை ஆகிய 6 நாட்கள் பரோலில் வெளியே வந்தவர் மீண்டும் சிறை செல்லாமல் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை மத்திய சிறை அலுவலர் தர்மலிங்கம் என்பவர் 21.01.2019 அன்று கொடுத்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கைதி சண்முகையாவை தேடிவந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் மேற்பார்வையில், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் தலைமையிலான தனிப்படை போலீசார் சண்முகையாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில், தீவிர விசாரணை மேற்கொண்டு தேடி வந்த நிலையில் சண்முகையாவை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பரோலில் வந்து 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சண்முகையாவை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Updated On: 19 Sep 2023 11:51 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
 3. குமாரபாளையம்
  அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
 5. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
 6. ஈரோடு மாநகரம்
  ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில்...
 7. தென்காசி
  தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
 8. சினிமா
  நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மீண்டும் சர்ச்சை
 9. தென்காசி
  தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
 10. ஆலங்குளம்
  மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை