திருவாரூர் அருகே மோசமான சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம்

திருவாரூர் அருகே 18 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் மோகமான சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவாரூர் அருகே மோசமான சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம்
X
திருவாரூர் அருகே மோசமான சாலையில் கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் ஒன்றியம் மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட மூல சாத்தங்குடி கிராமம் 18 ஆண்டுகளாக சரியான சாலை வசதி இல்லாமல் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள சாலையால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாகவும்,அவசர தேவைகளுக்காக வெளியில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.

மருத்துவ அவசரத்திற்காக ஆம்புலன்ஸ் அழைத்தால் கூட கிராமத்திற்குள் ஆம்புலன்ஸ் வராமல் வெளிப்புறச் சாலையிலேயே ஆம்புலன்ஸ் நின்று விடுவதாகவும் மிகவும் சிரமப்பட்டு இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தற்பொழுது மழை காலம் வரத்தொடங்கியுள்ள நிலையில் சாலை மேலும் மோசமடைந்து உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் கிராம மக்கள் வேறு வழியின்றி இன்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் அரசு காலம் தாழ்த்தினால் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்கரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 Oct 2021 10:27 AM GMT

Related News