திருவாரூரில் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட திருநங்கையின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவாரூரில் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை செய்துகொண்ட திருநங்கை வின்ஷிகா 

திருவாரூர் அருகே கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சிகா(28). திருநங்கையான இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, சில திருநங்கை தோழிகளுடன் தனி வீட்டில் வசித்து வந்துள்ளார். தற்பொழுது மாங்குடி அக்ரகார தெருவில் 3 திருநங்கை தோழிகளுடன் சேர்ந்து ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்றைய தினம் அவருடைய தோழி ஆண்ட்ரியா என்பவருடன் திருவாரூர் கடைத்தெரு பகுதிகளில் யாசகம் பெற்றுள்ளார். ஆண்ட்ரியா பேருந்து மூலம் தனது சொந்த ஊரான புதுச்சேரி செல்வதாக கூறி சென்ற நிலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார் வின்சிகா. புதுச்சேரி செல்வதாக கூறி சென்ற ஆண்ட்ரியா 3 மணி நேரத்திற்கு பிறகு மதியம் ஒன்று முப்பது மணி அளவில் மாங்குடி வீட்டிற்கு திரும்பிய பொழுது வின்சிகா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வின்சிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனையில் முடிவிலேயே இது கொலையா அல்லது தற்கொலையா என்ற தெரியும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

 1. திருநெல்வேலி
  அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: நெல்லை அதிமுகவினர்...
 2. நாகப்பட்டினம்
  ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தேர்வு: நாகையில் இனிப்பு வழங்கிய அ.தி.மு.க.வினர்
 3. அரியலூர்
  அரியலூர் அருகே நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
 4. ஓமலூர்
  மோசடி வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
 5. ஈரோடு
  திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற லாரி: போக்குவரத்து பாதிப்பு
 6. ஈரோடு
  சிவகிரி: கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு
 7. கங்கவள்ளி
  சேலத்தில் தாத்தாவை கொல்ல முயன்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
 8. காஞ்சிபுரம்
  லாரி மீது தொழிற்சாலை பேருந்துமோதல் - 15பேர் காயம்
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் டூவீலர் மோதி விபத்து - மூதாட்டி பலி
 10. அரியலூர்
  ஒமிக்ரான் வைரஸ் குறித்த முன்னேற்பாடு பணிகளை அரியலூர் கலெக்டர் ஆய்வு