/* */

திருவாரூர் பகுதியில் சிறப்பு பூஜைகளுடன் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்

திருவாரூர் பகுதியில் சிறப்பு பூஜைகளுடன் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினர்.

HIGHLIGHTS

திருவாரூர் பகுதியில் சிறப்பு பூஜைகளுடன் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்
X

திருவாரூர் மாவட்ட பகுதியில் குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் சிறப்பு பூஜையுடன் தொடங்கினர்.

திகாவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை பகுதிகளில் பிரதான தொழில் விவசாயம். இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி ஆகிய நெல் சாகுபடிகள் சுமார் 20 லட்சம் ஏக்கரில் நடைபெறுவது வழக்கம்.

விவசாயத்திற்கு தேவையான தண்ணீருக்கு விவசாயிகள் மேட்டூர் அணையை பெரிதும் நம்பியுள்ளனர். ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயகள் குறுவை சாகுபடியை தொடங்குவது வழக்கம்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையை திறந்த வைத்துள்ளார். இது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் முதல்வருக்கு மகிழ்ச்சியை தெரிவித்தது மட்டுமின்றி, ஒரு படி கூடுதலாக சிறப்பு பூஜைகள் செய்து குறுவை விவசாயப் பணிகளை தொடங்கி உள்ளனர்.

திருவாரூர் அருகே பூதமங்கலச்சேரி கிராமத்தில் டிரம் சீடிங் எனப்படும் நேரடி நெல் விதைப்பை விவசாயிகள் இன்று மேற்கொண்டனர்.

இந்தாண்டு விவசாயம் தடையின்றி நடைபெற தமிழ்நாடு முதலமைச்சர் தூர் வாருதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என்றனர்.

டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை விவசாயம் நடைபெற ரூ.65 கோடி மதிப்பில் ஆறுகள் தூரவாரப்பட்டு வருவதும், விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை

நேரத்தில் குறைந்த விலையில் வேளாண் பொறியியல் துறை மூலமாக விவசாய பணிக்காக இயந்திரங்கள் வழங்கி வருவதும் விவசாயிகளுக்கு பேருதவியாக உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக விவசாயிகள் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே விவசாயக் கடன்களை எந்தவித நெருக்கடியின்றி வழங்கிடவும், விதை, உழவு, நடவு மானியங்கள் அடங்கிய குறுவை சிறப்பு தொகுப்பை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், உள் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 12 Jun 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்