/* */

திருவாரூர் கமலாலய குளம் தடுப்புச்சுவர் கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கமலாலய குளத்தின் தடுப்புசுவர் கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருவாரூர் கமலாலய குளம் தடுப்புச்சுவர் கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு
X

திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் கமலாலய குளக்கரை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.

திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவிலுக்குட்பட்ட கமலாலயகுளத்தின் தென்கரை பகுதியில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புசுவர் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்

திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குட்பட்ட கமலாலயம் திருக்குளமானது வடக்கு, தெற்கு திசைகளில் 1060 அடியும், கிழக்கு, மேற்கு திசைகளில் 790 அடியும் அளவுகள் கொண்ட பெரிய தெப்பக்குளமாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி பொழிந்த கனமழையின் காரணமாக தென்கிழக்கு மூலையின் மதில்சுவரின் ஒரு பகுதி 101 அடி சரிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து, மேலும் 47 அடி சுவர் சேதமடைந்தது. தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க 23.12.2021 அன்று ரூ.77 இலட்சம் மதிப்பீட்டில் 148 அடி சுவர் மீண்டும் அமைத்திட பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என்றார்.

இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன், திருவாரூர் மாவட்ட பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 21 Jan 2022 9:46 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  3. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  4. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  5. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  6. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  7. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  8. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  9. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  10. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!