/* */

திருவாரூர் அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

திருவாரூர் அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
X

திருவாரூர் அருகே நடந்த சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியம் பெருந்தரங்குடி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றம் விழிப்புணர்வு முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆண்மை நீக்கம், சீனை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், கால்நடை வளர்ப்போர் கடன் அட்டை (கிசான் கிரெடிட் கார்டு) குறித்து எடுத்துரைக்கப்பட்டு கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன. ஸ்கேன் மூலம் கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் கண்டறியப்படுவதை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு பாராட்டினார்.

இம்முகாமில் கால்நடை வளர்ப்போருக்கு 100 கிலோ தாது உப்புக்கலவை வழங்கப்பட்டது. இம்முகாமில், 87 கன்றுகளுக்கும், 264 வெள்ளாடுகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 526 கோழிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 354 மாடுகளுக்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 52 கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றம் செயற்கைமுறை கருவூட்டல் செய்யப்பட்டது.

மேலும், சிறந்த கால்நடை வளர்ப்போர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குநர் தனபாலன், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எழிலரசன், பெருந்தரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 21 Dec 2021 8:17 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  2. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  3. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  6. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  8. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...