/* */

உரிய ஆவணங்கள் இல்லாமல் 487 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்

திருவாரூர் அருகே வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 487 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

உரிய ஆவணங்கள் இல்லாமல் 487 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த 2 லாரிகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

திருவாரூர் காணூர் பகுதியில் உள்ள மாவட்ட சோதனைசாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர் .அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரியை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் 305 நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல முயன்றதையடுத்து திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வட்டாட்சியர் கடத்த முயன்ற லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டம் தேவூர் பகுதியில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் 182 நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசு நெல் மூட்டைகள் ஏற்றி செல்ல அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே செல்ல அனுமதி அளித்துள்ளது. நெல் மூட்டைகளை வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஒரேநாளில் திருவாரூர் வட்டாட்சியர் 484 நெல் மூட்டைகளை ஏற்றிவந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Jan 2022 6:26 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  7. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?