/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

வாக்காளர்கள் இறுதி பட்டியலை வெளியிடும் மாவட்ட ஆட்சியர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நகர்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்குரிய இறுதி வாக்காளர் பட்டியலினை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் /மாவட்ட தேர்தல் அலுவலர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளின் 216 வார்டுகளில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்குரிய வாக்காளர் பட்டியல்கள் தொடர்புடைய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பதிவு அலுவலர் நகராட்சி ஆணையர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்களால் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கூத்தாநல்லூர் நகராட்சியில் 23388 வாக்காளர்களும் மன்னார்குடி நகராட்சியில் 62988 வாக்காளர்களும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 17516 வாக்காளர்களும், திருவாரூர் நகராட்சியில் 50245 வாக்காளர்களும் உள்ளனர். பேரூராட்சியினை பொறுத்தவரை குடவாசல் பேரூராட்சி 11882 வாக்காளர்களும், கொரடாச்சேரி பேரூராட்சியல் 5835 வாக்காளர்களும், முத்துப்பேட்டை பேரூராட்சியில் 18662 வாக்காளர்களும், நன்னிலம் பேரூராட்சியில் 9597 வாக்காளர்களும், நீடாமங்கலம் பேரூராட்சியல் 7849 வாக்காளர்களும், பேரளம் பேரூராட்சியில் 5048 வாக்காளர்களும், வலங்கைமான் பேரூராட்சியில் 9491 வாக்காளர்களும் என மொத்தம் இந்நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் 1,06,434 ஆண் வாக்காளர்களும், 1,16,027 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலின வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். நடைபெறவுள்ள நகராட்சி; உள்ளாட்சி தேர்தல்களுக்கு 282 எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?