/* */

திருவாரூர்: வீட்டுமனை மோசடி தொடர்பாக கலெக்டரிடம் புகார்

திருவாரூர் மாவட்டத்தில் வீட்டுமனை திட்டத்தில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவாரூர்: வீட்டுமனை மோசடி தொடர்பாக கலெக்டரிடம் புகார்
X

வீட்டுமனை  மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

திருவாரூர் தெற்கு வீதியில் இயங்கிவரும் ஏ1 புரமோட்டர்ஸ் என்ற நிறுவனம் மாதத்தவணையின் பெயரில் வீட்டுமனை வழங்குவதாக கூறி ஏராளமானோரிடம் பணம் வசூலித்து வந்துள்ளது .கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்த நிறுவனம் திருவாரூரை அடுத்த மாங்குடி அருகே கீழ மணலியில் வீட்டுமனை தருவதாக அறிவித்திருந்தது.

இதை நம்பி 2013 முதல் 2017 ஆம் ஆண்டு வரை 40க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தி முடித்துள்ள நிலையில், இதுவரை வீட்டுமனை தரவில்லை எனவும் வீட்டுமனை தர இயலாவிட்டால் பணத்தை திருப்பித் தருமாறு பலமுறை கேட்டும் அதற்கான பதிலும் அளிக்காத நிலையில் இன்றைய தினம் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

வீட்டு மனையை பெற்றுத்தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் கட்டிய பணத் தொகையை பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.


Updated On: 21 Sep 2021 6:49 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  2. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  4. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  7. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  9. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  10. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு