திருவாரூரில் இல்லம் தேடி கல்வி திட்டம்: பிரச்சார வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைப்பு

திருவாரூரில் “இல்லம் தேடிக் கல்வி” திட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவாரூரில் இல்லம் தேடி கல்வி திட்டம்: பிரச்சார வாகனத்தை ஆட்சியர் துவக்கி வைப்பு
X

திருவாரூரில் “இல்லம் தேடிக் கல்வி” திட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைகிணங்க "இல்லம் தேடிக் கல்வி" எனும் திட்டத்தினை பள்ளிக்கல்வி துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலமாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்ய, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களிலும் 8 கலைக்குழுவினரைக் கொண்டு பொது மக்களிடையே இத்திட்டம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த "விழிப்புணர்வு கலைப்பிரச்சார வாகனம்" தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்விழிப்புணர்வு கலைப்பிரச்சார வாகனத்தின் மூலம்; மாவட்டத்திலுள்ள 10 ஒன்றியங்களிலும் ஒரு நாளைக்கு இரண்டு பள்ளிகள், இரண்டு குடியிருப்பு பகுதிகள் என்ற வகையில் 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் கலைக்குழு மூலம் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற தேர்தெடுக்கப்பட்ட வீதி நாடக கலைஞர்களைக் கொண்டு இத்திட்டத்தின் குறிக்கோளினை பொது மக்கள் மற்றும் மாணவர்களிடத்தில் எடுத்து செல்லப்பட உள்ளது.

மேலும், இல்லம் தேடிக் கல்வி திட்டமானது கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் 1 முதல் 8 வகுப்புகள் வரை பயிலுகின்ற மாணவர்கள் கற்றல் இழப்பினை ஈடுசெய்தல் மற்றும் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக பள்ளி நேரங்களை தவிர்த்து மாணவர்களின் வசிப்பிடம் அருகே தன்னார்வலர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல், கற்றல் திறன்களை திட்ட செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல், குறைந்தபட்சம் 6 மாத காலத்திற்கு 1 முதல் 1 ½ மணி நேரம் எளிய முறையில் செயல்பாடுகள் வாயிலாக கற்றல் வாய்ப்பை வழங்குதல் ஆகும்.

இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பமுள்ளவர்கள் இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், முதன்மை கல்வி அலுவலர் ததியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் (மன்னார்குடி) மணிவண்ணன், (திருவாரூர்) பார்த்தசாரதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Updated On: 25 Nov 2021 11:59 AM GMT

Related News

Latest News

 1. திருவெறும்பூர்
  திருச்சியில் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிதி உதவி
 2. பெரம்பலூர்
  மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 4 பவுன் செயின் பறிப்பு
 3. தமிழ்நாடு
  வில்லங்கச் சான்று விவரங்களை திருத்த எளிய வழி: அரசு அதிரடி அறிவிப்பு
 4. கடலூர்
  கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது
 5. கடலூர்
  கடலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் ஆய்வாளர் நிவாரண...
 6. கடலூர்
  ஒமிக்ரான் எதிரொலி: கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கை
 7. கடலூர்
  கடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரணம்
 8. நாகப்பட்டினம்
  நாகையில் 1,113 பயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கினார்
 9. கீழ்வேளூர்
  மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் நாகை அரசுப்பள்ளி மாணவி வெற்றி
 10. கரூர்
  நல வாரியத்தில் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டம்: ஆட்சியர்