திருவாரூரில் முதல்வர் திறந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் பயன்பாட்டிற்கு வந்தது

திருவாரூரில் புதிதாக பதிவாளர் அலுவலகம் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் காயத்ரி குத்து விளக்கு ஏற்றினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவாரூரில் முதல்வர் திறந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் பயன்பாட்டிற்கு வந்தது
X

முதல்வரால் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் கலெக்டர் காயத்ரி குத்துவிளக்கேற்றினார்.

தமிழக முதல்வராக மு. க. ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்திற்கு மாவட்ட பதிவாளர் அலுவலகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதுநாள் வரையிலும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சங்கம் பதிவுசெய்யவும், பத்திர பதிவு செய்யவும் உள்ளிட்ட பல்வேறு பதிவு துறை சம்பந்தமான வேலைகளுக்கு திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள பதிவாளரிடம் பதிவு பெற வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வர் இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு என புதிதாக பதிவாளர் அலுவலக கட்டிடத்தினை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள், பத்திர பதிவுத்துறை துணைத் தலைவர் ஆனந்த், திருவாரூர் மாவட்ட பதிவாளர் ஜனார்த்தனன், திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா, திருவாரூர் நகர மன்றத் தலைவர் புவணப்பிரியா செந்தில், நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 April 2022 1:24 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  'நீங்கள் எந்த கட்சி என்பது முக்கியமல்ல; அந்த கட்சியின் முன்னேற்றமே...
 2. திருவொற்றியூர்
  சென்னை திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு...
 3. திருவொற்றியூர்
  அதிமுக முன்னாள் அவை தலைவர் மதுசூதனனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
 4. ஜெயங்கொண்டம்
  வெள்ளபாதிப்பு : பொதுமக்களை சந்தித்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுதல்
 5. திருவொற்றியூர்
  பராமரிப்பு பணிகளுக்காக சென்னை வந்த அமெரிக்க கடற்படை கப்பல் சார்லஸ்...
 6. ஸ்ரீரங்கம்
  திருச்சி பெட்டவாத்தலையில் பரஞ்ஜோதி தலைமையில் அ.தி.மு.க கொடியேற்று
 7. இந்தியா
  போலீசுக்கு செக் வெச்சுட்டாங்க இனி கண்ட இடத்துல நிறுத்த முடியாது
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது
 9. செஞ்சி
  செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாடு
 10. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு, நாடி சிகிச்சை ஆலோசனை