/* */

வாக்கு எண்ணும் மையத்திற்கு பூட்டி சீல் வைப்பு

வாக்கு எண்ணும் மையத்திற்கு பூட்டி சீல் வைப்பு
X

திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருவாரூர், திருத்துறைப்பூண்டி ,நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவாரூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையமான திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.இந்த வாக்கு எண்ணும் மையம் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பில் உள்ளது. 120 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . சிசிடிவி கேமராக்கள் பொருத்தியும், உயர் கோபுரங்கள் அமைத்தும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது .

Updated On: 7 April 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?