/* */

திருவாரூரில் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய்யம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார் .

HIGHLIGHTS

திருவாரூரில் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மைய்யம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
X

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார் .

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் முதல் அரசு முறை பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு நேற்று மாலை வந்தடைந்தார்.

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையம் மற்றும் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 250 படுக்கை வசதி கொண்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் .

தொடர்ந்து மாவட்டம் காட்டூர் கிராமத்தில் முழுமையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்

.தொடர்ந்து திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முதல்வருக்கு வெள்ளி செங்கோல் வழங்கினார்.

இதனை தொடர்ந்து கட்டிடத்தில் உள்ள வசதிகள் குறித்து நேரில் முதல்வர் ஆய்வு செய்தார். இதனையடுத்து திருக்குவளையில் உள்ள மறைந்த திமுக தலைவரின் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றனர்

இந்த நிகழ்ச்சியில் , நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் .கே.என் . நேரு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா . சுப்பிரமணியன் , பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் .அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் , விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் . சிவ.வீ. மெய்யநாதன் ,

புதுடில்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி.ஏ.கே.எஸ்.விஜயன் , நாடாளுமன்ற உறுப்பினர் . எஸ்.எஸ் . பழனிமாணிக்கம் , சட்டமன்ற உறுப்பினர்கள் . உதயநிதி ஸ்டாலின் , பூண்டி கே . கலைவாணன் , . துரை சந்திரசேகரன் , மாரிமுத்து , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் , தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது , திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப . காயத்ரி கிருஷ்ணன் ,ஊராட்சி மன்றத் தலைவர் விமலா பிரபாகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்

Updated On: 7 July 2021 12:40 PM GMT

Related News