/* */

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் பார்வயிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
X

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை திருத்துறைப்பூண்டி சுற்றுப்பகுதியில் உள்ள ஆலத்தம்பாடி. கச்சனம். இடையூர் .உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சுற்றுசூழல் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் நடைபெற்ற கொரானா தடுப்பூசி முகாமையும் பார்வையிட்டார் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் இருப்பு கேட்டறிந்தார் முன்கள பணியாளர்களுக்கு அனைவருக்கும் N95 மாஸ்க் கையுறை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்

அங்கிருந்த செவிலியர்கள் துப்புரவு பணியாளர்களை சந்தித்து இந்த இக்கட்டான சூழ்நிலையில் பணியாற்றும் உங்களுக்கு முதலமைச்சர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார் மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்

அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா என கேட்டார் அதன் பின்னர் அங்கிருந்த ஆம்புலன்சை பார்வையிட்டு அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்

இந்த ஆய்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர். க. மாரிமுத்து சுகாதாரதுறை இணை இயக்குனர் Dr. உமா. துணை இயக்குனர் Dr.கீதா. தலைமை மருத்துவர் சிவக்குமார். முன்னாள் நகர்மன்ற தலைவர் R.S.பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் திருத்துறைப்பூண்டியில் அரசு மருத்துவமனையில் 80 கொரானா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள் மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்கள் லேப் டெக்னீசியன் உள்ளிட்டோர் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை பாலிடெக்னிக்கல்லூரில் கோவிட் கேர் சென்டர் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன்பிளான்ட் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட நடமாடும் காய்கறி பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எந்தெந்த பகுதிக்கு வண்டிகள் செல்லவில்லை என ஆய்வு செய்து அனைத்து பகுதிகளுக்கும் நடமாடும் அத்தியாவசிய பொருட்கள் வண்டி செல்ல வருவாய் துறை வேளாண் துறை தோட்டக்கலைத் துறை சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்

Updated On: 26 May 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?