/* */

மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே உயர்கோபுர மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

HIGHLIGHTS

மின்கம்பம் சாய்ந்ததில்  மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
X

திருவாரூர் அருகே உயர் கோபுர மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராமத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட விளம்பர போர்டு வைக்கும் பணி செய்ய தருமபுரி மாவட்டம் அருதாசனம்பட்டி கிராமத்தில் இருந்து பனிரெண்டு இளைஞர்கள் வந்து தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். சாலைகள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணிக்காக விட்டுகட்டி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள வாய்க்கால் மற்றும் பாலத்தை அகலப்படுத்தும் பணிக்காக அந்த பகுதியில் இருந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றது. இந்தப் பணியில் தர்மபுரி மாவட்டம் தாசனபட்டியை சேர்ந்த மணி மகன் செந்தில் (வயது 34) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலு மகன் தமிழ்ச்செல்வம்(28) ஆகிய இருவரும் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உயர் கோபுர மின் கம்பத்தை பொக்லின் எந்திரத்தில் உள்ள 'ரோப் 'மூலம் கட்டி மேலே தூக்கினர்.

அப்போது மின்கம்பத்தை கட்டி மேலே தூக்கிய 'ரோப் அறுந்து மின்கம்பம் அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பியில் விழுந்தது. இதனால் அதிலிருந்த மின்சாரம் தாக்கி பணியிலிருந்த செந்தில் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரோடு பணியில் இருந்த தமிழ்ச்செல்வத்தை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்ததும் திருத்துறைப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி, காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, உதவி ஆய்வாளர்கள் சிவ குகன், தேவதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று மின்சாரம் தாக்கி பலியான செந்தில் உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த எம்.செந்திலுக்கு கவிதா(28) என்கிற மனைவியும், மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் கார்த்திகா(9) மற்றும் முதல் வகுப்பு படித்து கொண்டிருக்கும் திருமலைவாசன் (8) என்கிற குழந்தைகளும் உள்ளனர்.

Updated On: 21 April 2021 2:59 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  5. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்