/* */

திருவாரூர்: வீட்டில் அமைக்கப்பட்ட 2500-க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள்

திருவாரூர் அருகே நவராத்திரியையொட்டிவிஷ்ணு புரம் அக்ரஹாரத்தில் ஒரே வீட்டில் 2500 கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளன.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, விஷ்ணுபுரம் அக்ரஹாரத்தில் ஆடிட்டர் பத்மநாபன் மற்றும் அவரது குடும்பத்தார், இணைந்து 2500 -க்கும் மேற்பட்ட பொம்மைகளைக் கொண்டு நவராத்திரி கொலு வைத்துள்ளனர்.

பொதுமக்கள் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வந்து பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த கொலுவில்

மக்களின் வாழ்க்கை முறை, தொழில் போன்றவற்றை குறிக்கும் வகையிலும் ராமாயண காவியம், மகாபாரத காவியம் மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களின் உருவங்கள், முருகனின் அறுபடைவீடு அம்பாளின் மதுரை, காஞ்சிபுரம் ஆகிய கோவில்கள்..

மேலும், கிருஷ்ணனின் 'தசாவதாரம்' பொம்மைகளாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. சிறிய வகை பொம்மைகள் முதல் பிரம்மாண்டமான பொம்மைகள் வரை கொலுவில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த கொலு பொம்மைகளை தினந்தோறும் பொதுமக்களும் குழந்தைகளும் வந்து பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து ஆடிட்டர் பத்மநாபன் சொல்லும்போது " பாரத தேசம் முழுவதும் முக்கியமான கோயில் உள்ளது, வீட்டுக்குள்ளேயே அத்தனை கோயில்களையும் கொண்டு வந்ததற்கு காரணம் இதனை பார்க்கின்ற குழந்தைகள் கோயில்களைப் பற்றியும், தெய்வங்களைப் பற்றியும் மற்றும்கதைகளை தெரிந்து கொள்ள உதவுகின்றது" என்றார்.

Updated On: 16 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பிள்ளைக்கு நீங்கள் 'சூப்பர் ஹீரோ'வா?
  3. தேனி
    தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான...
  4. தேனி
    கைகளில் மருதாணி, மெகந்தி போட்டவர்களும் வாக்களிக்கலாம்!
  5. இந்தியா
    முதல்கட்ட தோ்தலில் களம் காணும் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள்,...
  6. கல்வி
    சுவாமி விவேகானந்தரிடமிருந்து மாணவர்களுக்கான அழியா ஞானம்
  7. திருச்சிராப்பள்ளி
    இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்! போராடி பெற்ற வாக்காளர்...
  8. இந்தியா
    மோடி ஆட்சியிலா சீனா, இந்தியாவை ஆக்கிரமித்தது..?
  9. இந்தியா
    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்! கர்நாடக...
  10. உலகம்
    உலகின் சிறந்த பாதுகாப்பு : அசத்தியது இஸ்ரேல்...!