/* */

திருவாரூர்:பட்டா வழங்க கோரி 47 குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு

திருவாரூர் மாவட்டத்தில் குளக்கரையில் வசிக்கும் 47 குடும்பத்தினர் பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

திருவாரூர்:பட்டா வழங்க கோரி 47 குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு
X
பட்டா கேட்டு மனு கொடுப்பதற்காக திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மக்கள்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கரை குளத்தெருவில் சுமார் 47 தினக்கூலி தொழிலாளர்கள் 40 வருடங்களுக்கு மேலாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்..

இந்நிலையில் கடந்த 2017 ஆண்டு தனி நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வீட்டை காலி செய்ய வேண்டும் என தொடர்ந்த வழக்கில் அப்போதே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் காமராஜ் சக்கரைகுளம் அருகில் 5 வயல்கள் மற்றும் இரண்டு வாய்க்கால்களைதாண்டி (சுமார் 600 மீட்டர் தொலைவில்) பருத்தி திடல் என்ற பகுதிக்கு பட்டா வழங்கியுள்ளார். ஆனால் இன்று வரை அப்பகுதிக்கு செல்ல சாலை வசதியோ, மின்சார வசதியோ, குடிநீர் வசதி களை அவர் ஏற்படுத்தி தரவில்லை.

அப்பகுதிக்கு தனி நபர்களின் வயல் வரப்பு வழியாக செல்ல வேண்டிய நிலையே உள்ளது. மேலும் இதனிடையே இரண்டு வாய்க்கால்கள் குறுக்கே செல்வதால் எப்படி குழந்தைகளை வைத்துக்கொண்டு அதனை தாண்டி செல்வது என்கிற கேள்வியும் எழுகிறது.

இந்த நிலையில் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறியுள்ளதால் வட்டாட்சியர் இங்கு வசிக்கும் மக்களுக்கு நோட்டடீஸ் வழங்கியுள்ளனர், எனவே தமிழக முதலமைச்சர் இப்பகுதி மக்களுக்கு அந்த திடலில் வசிப்பதற்கு தனிப்பட்டா வழங்க வேண்டும், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி வழங்கவேண்டும் இப்பகுதியில் வசிக்கும் அனைவரும் ஏழ்மையான சூழ்நிலை உள்ளதை கருத்தில் கொண்டு தமிழகஅரசு வீடு வழங்கும் திட்டத்தில் தங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும்,மேலும் அரசு கொடுத்துள்ள காலக்கெடு ஒரு சில தினங்களில் முடிய உள்ளதால் தங்களது வீடு எந்த நேரமும் இடிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என அப்பகுதி மக்கள்.மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On: 21 Sep 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?