/* */

மன்னார்குடி அருகே செல்போனில் பேசியபடி தடுப்பூசி செலுத்திய செவிலியர்

செவிலியர்கள் பொறுப்பை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

HIGHLIGHTS

மன்னார்குடி அருகே செல்போனில் பேசியபடி தடுப்பூசி செலுத்திய செவிலியர்
X

செல்போன் பேசியபடி தடுப்பூசி செலுத்தும் செவிலியர்

செல்போனில் பேசியபடி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய செவிலியரின் செயலால் அப்பகுதி மக்கள் வேதனையடைந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மன்னார்குடி அருகே உள்ள காந்தாரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் பங்கேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பெண் செவிலியர் ஒருவர் செல்போன் பேசிய படியே தடுப்பூசி செலுத்தியுள்ளார். பணி நேரத்தில் செல்போன் பேசிக்கொண்டு கவனக்குறைவாக தடுப்பூசியை மாற்றி செலுத்தக்கூடிய ஆபத்தும் உள்ளது.மேலும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என்ன விதமான தடுப்பூசி தங்களுக்கு போடப்பட்டுள்ளது என்ற குழப்பமும் ஏற்படும். எனவே, செவிலியர்கள் பொறுப்பை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

நேற்றைய தினம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேருக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்ட சூழலில், செவிலியர் ஒருவர் கவனக்குறைவாக நடந்து கொண்டிருக்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

Updated On: 13 Sep 2021 3:09 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  2. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  3. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  4. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  6. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  7. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  8. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  9. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  10. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...