/* */

திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தி.மு.க- கம்யூனிஸ்டு நேரடி போட்டி

திருவாரூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க- கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் நேரடியாக மோதுகிறார்கள்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்ட  ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தி.மு.க- கம்யூனிஸ்டு நேரடி போட்டி
X

இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் செல்வராஜ் எம்.பி. பேசினார்.

திருவாரூர் மாவட்ட ஊராட்சியில் காலியாக உள்ள பதினொன்றாவது வார்டுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக வீரமணி வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார். தி.மு.க. சார்பில் ரமேஷ், அ.தி.மு.க. வேட்பாளராக குமரகுருபரன் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள தி.மு.க. இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் ஒரே பதவிக்கு நேரடியாக போட்டியிடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஊராட்சிஉறுப்பினர் இடைத்தேர்தலுக்கான கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இதில்கலந்துகொண்ட நாகை பாராளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தின் அனைத்து இடைத்தேர்தல்களிலும்வார்டுகளிலும் தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கின்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற இந்தியம்யூனிஸ்ட் கட்சி அயராது பாடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .

ஏற்கனவே திராவிடமுன்னேற்றக் கழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணி சார்பில் தி.மு.க. விற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மாவட்டஊராட்சி11வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது

அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளராக வீரமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். வீரமணி தி.மு.க.வின் தலைமை கழகத்தில் அமைந்திருக்கின்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும்..தி.மு.க. வேட்புமனு தாக்கல்செய்து இருந்தாலும் உடன்பாட்டின்படி வாபஸ் வாங்கிக்கொள்வார்கள் என நம்புகிறோம் என்றார்.


Updated On: 23 Sep 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?