/* */

மூன்றாவது உலகப்போர் மூளுமா?

இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் உலகில் நடந்த எல்லாப் போர்களுக்கு அமெரிக்காதான் காரணமாக இருந்திருக்கிறது

HIGHLIGHTS

மூன்றாவது உலகப்போர் மூளுமா?
X

இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் உலகில் நடந்த எல்லாப் போர்களுக்கு அமெரிக்காதான் காரணமாக இருந்திருக் கிறது. அப்படிப்பட்ட போர்கள் வரும் போதெல்லாம், அமெரிக்காவின் பொருளாதாரம் அடிவாங்கி இருக்கும் அல்லது, போரில் தாக்கப்படும் நாடு, அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்திற்கு எதிரானதாக இருக்கும்.

உக்ரைன் போருக்கு முன்பு, போர் ஆரம்பிப்பது, முடிப்பது எல்லாம் அமெரிக்காவின் கையில்தான் இருந்தது, இன்று அது கைவிட்டுப்போனது. அதற்கு இரண்டு காரணம், அமெரிக்காவின் நேட்டோ அணியை யாரும் வெல்ல முடியாது என்ற சூழல், அடுத்ததாக, தனக்கு எதிராக எந்த ஒரு பலமான கூட்டணியும் இல்லாமல் அமெரிக்கா பார்த்துக் கொண்டது. ஆனால் அந்த நிலை இன்று மாறிவிட்டது. மாறியதற்கும் காரணம் அமெரிக்காவின் மிக கேவலமான சுயநலம் என்றால், மறுபக்கம் அதை எதிர்க்க ஒரு நம்பிக்கையான தலைமை அமைந்தது. அந்த நம்பிக்கையான எதிரிகளை சேர்க்கும் நாடாக இந்தியா பலமானதாக மாறியது.

தற்போது அமெரிக்கா மிக மோசமான பொருளாதார நிலைக்கு சென்றதால், அதற்கு ஒரு போர் தேவைப்பட்டது. அந்த போரின் மூலம் ஆயுத விற்பனையில் நேரடியாக ஆதாயம் பார்ப்பது, செயற்கையாக டாலர் டிமாண்ட் கிரியேட் செய்து அதன் மூலம் தன் பொருளாதாரத்தை சரி செய்து கொள்வது, போரின் மூலம் எதிரியை அழிப்பது என்று All-In-One என்ற ஃபார்முலாவை பயன்படுத்தும். இன்று அதன் பொருளாதாரம் மீட்க முடியாத ஒரு நிலைக்கு சென்றாலும், எதிரிகள் அதிகரித்து விட்டதாலும் எல்லோரையும் ஒரு சேர அழிக்க அது பயன்படுத்தும் யுக்தி உலகப் போராகத்தான் இருக்க முடியும் அல்லது அதில்தான் போய் முடியும்.

இன்று அதற்கு தன் பொருளாதாரத்தை காக்க மட்டுமல்ல, தனது எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமானால், தன் எதிரணியால் முனெடுத்துச்செல்லும் Dedollarization என்பது கண்டிப்பாக தடுத்தே ஆக வேண்டும். அதே சமயம் இந்தியா-ரஷ்யா-சீனா தலைமையில் எதிரிகள் கூட்டணி சேராமல் இருக்க வேண்டும். இன்றைய நிலையில் அதன் பொருளாதாரம் கைவிட்டு போய்க் கொண்டு இருக்கிறது. எதிரிகள் BRICS மூலம் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

அதே சமயம், அமெரிக்கா தன் சொந்த நேட்டோ கூட்டணியில் உள்ள ஐரோப்பிய கூட்டணி நாடுகள் இணைந்து ஒரு பொருளாதார சக்தியாக வளர்வதையும் அது விரும்பவில்லை. அதனால் அவற்றையும் அது பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த நினைத்தது. அதற்கு பயன்படுத்தியது உக்ரைன் போர். அந்த போரில் அது எதிர்பார்த்தது, தனது எதிரியான ரஷ்யாவை உடைப்பது, அதே வேளையில் அந்த போரினால் ஐரோப்பிய யூனியனையும் பலவீனப்படுத்துவது.

அமெரிக்கா ஒருபோதும் வலுவான நாடுகளோடு நேரடியாக மோதாது. மற்றவர்களை தூண்டிவிட்டு, பின்னால் இருந்து குளிர்காயும். ஆனால் தெரியாமல் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனில் கால்வைத்து அது தன் நிலையை சிக்கலாக்கி கொண்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக, ரஷ்யா இந்த போரை லாவகமாக கையாண்டது மட்டுமல்லாமல், ஏற்கனவே உருவாக்கிய BRICS கூட்டணி மூலம் தன்னை தற்காத்துக்கொண்டது. சீனா தன்னுடன் வரும் என்பது அதற்கு தெரியும், ஆனால் இந்தியா அமெரிக்க, ஐரோப்பிய யூனியன்களுக்கு சாதகமற்ற நிலையை எடுக்கும் என்பது ரஷ்யாவே எதிர்பாராத டுவிஸ்ட். இது அமெரிக்காவை பலவீனப்படுத்தியது.

அதாவது அமெரிக்கா, இந்தியா உட்பட எல்லோரையும் எதிரிகளாக்கி, பலவீனப்படுத்த நினைத்தது. அதன் மூலம் நட்புக்களே இல்லாமல் ஒரு பக்கம் பலவீனப்படுத்தி தன் அணியையும் பலவீனமாக்கியது. மறுபக்கம் தனது தகுதிக்கு மீறிய எதிரிகளை ஒரு சேர எதிர்த்து பெரிய தவறை செய்துவிட்டது.

அதனால் அமெரிக்கா தன்னை காக்க வேண்டுமெனில் அது எதிர்பார்க்கும் அப்படிப்பட்ட போர் என்பது

1) சீனா-தைவான் போர்.

2) வட-தென் கொரியா போர்.

3) இந்தியா-பாகிஸ்தான் போர்.

4) இந்தியா-சீனா போர்.

5) ஈரான்-இஸ்ரேல் போர்.

அதற்கு இன்றைய நிலையில் சீனா-தைவானை தன்னிடம் சேர்த்துக் கொள்ள இதை விட்டால் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்று நினைக்கிறது. அதே சமயம் சீனா தன் பொருளாதர வீழ்ச்சியை தடுக்க வேண்டுமெனில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தடுத்தே ஆகவேண்டும். ஆனால் தைவான் மீது கை வைத்தால், அமெரிக்கா அதில் நேரடியாக போரில் இறங்கும் என்ற நிலையில், அந்த போர் உலகப் போராக மாறினால் மட்டுமே அமெரிக்கா தப்பிக்க முடியும். சீனா-ரஷ்யா- வடகொரியா-ஈரான் போன்றவை ஒன்றாக சேர்ந்தால் மட்டுமே சீனாவிற்கு வாய்ப்பு உண்டு.

ஆனால் அமெரிக்கா நினைப்பது, சீனா தைவானின் மீது போர் தொடுத்தால், தென்-மேற்கிலிருந்து இந்தியா சீனாவை தாக்கும் என்ற நம்பிக்கையில் தான் அது நேரில் போரில் இறங்கும். இல்லா விட்டால், உக்ரைனை கைவிட்டது போல, தைவானையும் கைவிட்டு, அமெரிக்கா அதில் ஆதாயம் மட்டுமே பார்க்க முயலும்.

முன்பு சீனா இந்தியாவை தாக்கினால், நாங்கள் இந்தியாவின் பின்னால் நிற்போம் என்று தூண்டில் போட்டு பார்த்தது. பாகிஸ்தானை இந்தியா தாக்கும் என்று பயமுறுத்தி பார்த்தது எதுவும் நடக்காததால், தானே போர் செய்ய வேண்டிய சூழலில் இன்று அமெரிக்காவிற்கு வந்துள்ளது. அதனால் உலகப்போர் மட்டுமே அதனை சரி செய்யும் ஒரே வாய்ப்பாக இருக்கும்.

இந்தியா இந்த போரில் கலந்து கொள்ளாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கும். அதில் யார் தோற்றாலும், லாபம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே நல்லது. அதாவது, அமெரிக்கா முன்பு செய்ததை இன்று இந்தியா செய்கிறது. இந்த போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

Updated On: 6 April 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...