அமெரிக்காவின் சிலிகான்வேலி வங்கி திவால் ஆக என்ன காரணம்?

அமெரிக்காவில் 2008 க்கு பிறகு 16 வது பெரிய வங்கியான Silicon Valley Bank எதனால் திவால் ஆனது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அமெரிக்காவின் சிலிகான்வேலி வங்கி திவால் ஆக என்ன காரணம்?
X

பைல் படம்

அமெரிக்காவில் பல வங்கிகள் ஊசலாடுகிறது. அமெரிக்க அரசாங்கம் தள்ளாடுகிறது. பொருளாதாரம் நாள்தோறும் சரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பைடன் அரசோ இதையெல்லாம் விட்டு விட்டு உக்ரைன் போருக்கு பணத்தை வாரி இறைக்கிறது. இதில் பின்வாங்கினால் ரஷ்யாவிடம் நேரடியாக தோற்றதாகி விடும் எனும் போது அதன் வல்லரசு என்ற பட்டம் குப்பைத்தொட்டியில் வீச வேண்டியதாகி விடும்.

ஆனால் அங்கு தோற்காமல் உள்நாட்டில் தோற்கிறது. ஆம் யானைக்கும் அடி சறுக்கும்! இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, உலக முழுவதும் 78 தள்ளாடும் நாடுகளின் வங்கிகளின் நிலையும் இது தான். அதனால் வங்கிகளின் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நன்றாக இருந்த நிறுவனங்களையே நாசமாக்க நினைக்கும் மேற்கத்திய, மற்றும் சீனா நாடுகள், அப்படியொரு நிலை நாளை நமக்கு வந்தால் அதை பயன்படுத்தி பேயாட்டம் ஆடிவிடுவார்கள். அப்போது அவர்கள் மக்களை பயமுறுத்தி வதந்திகள் மூலம் எப்படி அதானி குரூப் ஷேர்களை விற்க வைத்தார்களோ, அதுபோல செய்வார்கள். அதனால் வங்கிகள் பற்றி எளிதாக புரிய வைக்க ஒரு முயற்சிதான் இந்த பதிவு.

சிறுக்கிணர் கிராமத்தில் 100 வீடுகள் உள்ளது. அதில் 10 பேர் வெளியூரில் தொழில் செய்வது போன்ற வகையில் பணக்கரார்களாக உள்ளார்கள். 30 பேர் விவசாயிகள், 40 பேர் விவசாய தொழிலாளிகள், 20 பேர் மற்ற தொழில் அல்லது அரசியல் செய்கிறார்கள்.

இதில் 10 பணக்காரர்கள் சேர்ந்து ஆளுக்கு 10 லட்சம் போட்டு, 1 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு வங்கியை துவங்குகிறார்கள். மேலும் 1 கோடி ரூபாய் அந்த கிராமத்தில் உள்ளவர்கள் சேமிப்பாக 6% வட்டிக்கு டெபாசிட் செய்கிறார்கள். அதில் மத்திய ரிசர்வ் வங்கிக்கு Cash Reserve Ratio என்ற பெயரில் 5% வைத்திருக்க வேண்டும் என்பதால் 10 லட்சம் RBI க்கு போகிறது. மீதி இருக்கும் காசில் தொழில் செய்பவர்கள் 12% வட்டிக்கு கடன் கொடுகிறார்கள்.

நன்கு மழை பெய்து, தொழில்கள் சிறப்பாக போவதால் 1.5 கோடி கடன் கொடுக்கிறார்கள். அதன் மூலம் 18 லட்சம் வருமானமாக வருகிறது. அதில் 9 லட்சம் வட்டியாக டெபாசிட் செய்தவர்களுக்கு கொடுக்கிறார்கள். மீதம் 9 லட்சம் அவர்களின் வருமானம். அதில் செலவுகள் 2 லட்சம் போக 7 லட்சம் லாபமாக வருகிறது. அதில் 10% வரியாக ரூ.70,000 போக நிகர லாபம் ரூ.6,30,000 நிற்கிறது. அதாவது, அவர்கள் போட்ட ஒரு கோடி ரூபாய்க்கு 6.3% வட்டியாக கிடைக்கிறது.

மேற்சொன்ன உதாரணத்தில் 40 லட்சம் ரூபாய் வங்கியில் இருப்பதால் வட்டி இல்லாமல் இருக்க அரசாங்கத்தின் பாண்டுகளாக 20 லட்சத்திற்கு 4% வட்டிக்கு கொடுக்கிறார்கள். அதில் வரும் ரூ.80,000 வருமானம் மூலம் லாபம் உயர்கிறது. இன்னும் மீதம் இருக்கும் 20 லட்சம், யாரவது டெபாசிட் செய்பவர்கள் கேட்டால் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் அல்லவா, அதற்காக Liquid Cash ஆக வங்கியில் வைத்திருக்கிறார்கள். இதை சரியாக பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் லாபத்தை உயர்த்த முடியும். உங்களுக்கு தனிநபர் கடன் வேண்டுமா, 5 நிமிடத்தில் 15% க்கு லோன் கொடுக்கிறோம் என்று சொல்லி கொடுக்கிறார்களே, அந்த பணம் எல்லாம், இதுபோல வட்டியில்லாம தூங்கி கொண்டிருக்கும் பணத்தை உபயோகப்படுத்தவே.

திடீரென கொரோனா போன்ற தொற்று வந்ததால் கடன் வாங்கி தொழில் செய்பவர்கள், தொழில் இல்லாததால் கடனில் 50 லட்சத்தை திருப்பி செலுத்துகிறார்கள். அப்படியெனில் அவர்கள் வருமானம் 12 லட்சமாக குறைகிறது. அது மட்டுமல்ல அந்த பணத்தை வாங்க யாரும் இல்லாததால், அது வீணாக வங்கியில் வைத்திருந்தால் நஷ்டம் என்பதால் அந்த 50 லட்சத்தையும் அரசு பாண்டுகளில் 4% வட்டிக்கு 5 வருடங்களுக்கு பாதுகாப்பான முதலீடு செய்கிறார்கள். இப்போது மொத்தம் 70 லட்சம் அரசு பத்திரங்களில் 5 வருட கால முதலீடாக இருக்கிறது.

சில மாதங்கள் செல்கிறது, தொழில்கள் எல்லாம் முடங்கி விட்டதால், வைத்திருக்கும் பணத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் பலர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்கள். அதில் வேகமாக லாபம் வர, வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலிடு செய்ய 30 லட்சத்தை எடுக்க வருகிறார்கள். ஆனால் வங்கியில் 20 லட்சம் மட்டுமே Liquid Cash ஆக உள்ளது. அதனால் அவர்களுக்கு 10 லட்சம் பணம் கொடுக்க முடியவில்லை.

எனவே அவர்கள் வாங்கிய அரசு பத்திரங்களை உடனே எடுக்க முடியாததால், மார்கெட்டில் நஷ்டத்திற்கு விற்கிறார்கள். அதன் மூலம் வரும் பணத்தை அவர்களுக்கு கொடுத்தாலும், பணம் கொடுக்க தாமதம் ஆனதால், வங்கி திவாலானதாக வதந்தி பரவுகிறது. எனவே மற்றவர்களும் பயந்து தங்கள் பணத்தை எடுக்க வர, வங்கியால் அதை திருப்பி கொடுக்க முடியாமல் போகிறது. தற்போது வேறு வழியில்லாமல் வங்கி திவால் ஆனதாக அறிவிக்க வேண்டிய சூழல்.

ஆனால் உண்மையில் இங்கே திவால் ஆகவில்லை. முதலீடு செய்தவர்களிடம் அந்த பணத்தை புரட்டும் தகுதி இருந்தால், அந்த வங்கி திவால் ஆகாது. அது இல்லாதபோது அது திவால் ஆனதாகவே கருதப்படும். இந்த சூழலில், வங்கியில் இருக்கும் பணம் என்பது வெளியே இருக்கிறது, அது வர தாமதமாகிறது, அவ்வளவே! எனவே பெரிய வங்கி ஒன்று 1.25 கோடி ரூபாய்க்கு அந்த வங்கியை வாங்கி, அதில் டெபாசிட் செய்தவர்களுக்கு பணம் கொடுக்கிறது. ஆனால் 10 பேர் சேர்ந்து செய்த முதலீடு 1 கோடி, ஆனால் அவர்களுக்கு இதை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை வெறும் 25 லட்சம் என்பதால் 75 லட்சம் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஆகிறது.

இதுவே சில வருடங்கள் கழித்து நடந்தால், அவர்கள் லாபம் மூலம் போட்ட தொகையை எடுத்து விடுவார்கள். ஆனால் குறுகிய காலத்தில் நடந்தால், அது நஷ்டம் என்று பிரச்சினையில் முடியும். இது போன்ற சூழலில், அரசாங்கம் அவர்கள் வைத்திருக்கும் அரசு பாண்டுகளை வைத்துக்கொண்டு குறைந்த வட்டியில் கடன் கொடுக்குமேயேனால் வங்கிகள் தப்பிக்கும் வாய்ப்புகள் உண்டு. அதற்கு குஜராத் போல மிதமிஞ்சிய பட்ஜெட் போடும் மாநிலம் என்றால் கொடுக்கலாம். ஆனால் தமிழகம், கேரளா போல அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாது, ஊழியர்களின் PF தொகையைக்கூட செலுத்தாத சூழலில் இருக்கும் அசாங்கத்தால் அதை செய்ய முடியுமா?

எனவே புரிந்து கொள்ளுங்கள், இந்திய அரசு பலமாக இருந்தாதால் Yes Bank போன்ற சில வங்கிகள் வீழ்ந்த போது, இந்திய அரசு வங்கிகளை வைத்து அதை வாங்கி சமாளித்துக் கொள்ள முடிந்தது. அதனால்தான் அரசாங்கம் மிக பலமாக இருக்கும் நாடுகளில் முதலீடு செய்வதை நல்ல தொழில் அதிபர்கள் விரும்புவார்கள்.

அதுமட்டுமல்ல, நல்ல ஒரு அரசு ஆட்சியில் இருக்கும் வரை நமது பணம் வங்கியில் பாதுகாப்பாக இருக்கும். அது மட்டுமல்ல அந்த பணத்திற்கு மதிப்பும் இருக்கும், இல்லாவிட்டால் பாகிஸ்தான் ரூபாயைப்போல குப்பையாகி விடும். அமெரிக்கா அப்படியொரு நிலையில் தான் இருந்தது. அது போன்ற காலங்களில் ஏதாவது ஒரு நாட்டில் போர் தொடுக்கும். அதனால் கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலை இரு மடங்காக உயரும்.

அதனால் மற்ற பொருள்கள் விலை உயரும் போது, நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் டாலரில் நடப்பதால், உடனே டாலர் டிமாண்ட் கூடும். அப்போது அமெரிக்கா அந்த டாலரை பிரிண்டு செய்து இந்த வங்கிகளுக்கு கடனாக கொடுத்து பிரச்னையை சமாளித்து விடும். ஆனால் அமெரிக்காவில் ஒரு வங்கி செய்த தவறுக்கு, தாராபுரத்தில் பெட்ரோல் விலை ரூ.70 என்பது உயர்ந்து ரூ. 100 ஆகும். அதற்கு நாம் அதிக உழைத்து அதற்கான பற்றாக்குறையை சமாளிப்போம். ஆனால் தவறு செய்த அமெரிக்கா, நம் உழைப்பை உறிஞ்சி திவால் ஆன பேங்குக்கு கொடுக்கும். சரி, அதை இப்போது ஏன் அமெரிக்காவால் செய்ய முடியவில்லை?

அமெரிக்கா, உக்ரைன் மூலம் ரஷ்யாவை போர் செய்யத்தூண்டி, அதன் மூலம் ஒரு பக்கம் தங்கள் ஆய்தங்களை விற்று சம்பாதிக்கவும், மறுபக்கம் டாலர் டிமாண்டால் இலவசமாக பிரிண்ட் செய்து கொள்வதன் மூலம் திட்டமிட்டது. ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகள் இனிமேல் நாங்கள் டாலரை வைத்து கச்சா எண்ணெய் வாங்க போவதில்லை, ரூபாயை அல்லது BRICS நாடுகளின் கரன்ஸியை வைத்து வாங்கிக்கொள்கிறோம் என்று சொன்னதால், அவர்கள் நினைத்தது போல டாலர் டிமாண்டை உயர்த்த முடியவில்லை.

அதே சமயம் ரஷ்யா சீப்பாக குரூட் ஆயில் விற்பதால், அதனிடம் ரூபாயை கொடுத்து குரூட் ஆயில் வாங்க முடிவதால், OPEC நாடுகளிற்கு கச்சா எண்ணெய் டிமாண்ட் குறைய, இப்போது அவர்களே முன்வந்து நாங்களும் குறைவாக கச்சா எண்ணெய் கொடுக்கிறோம், அதுவும் ரூபாயிலேயே விற்கிறோம், வாருங்கள், வாங்குங்கள் என்கிறார்கள். அவர்கள் விலையை குறைத்தால் ரஷ்யா, அதைவிட குறைக்கிறது, எனவே அதுவும் அவர்களால் செய்ய முடியவில்லை. செயற்கையாக விலையை ஏற்ற முடியவில்லை.

எனவே இப்போது அமெரிக்கா டாலர் அடித்தால் அதன் மதிப்பு ஒருபக்கம் குறையும், அதனால் அவர்கள் டாய்லெட் பேப்பர் முதல் காய்கறி வரை எல்லாமே இறக்குமதி செய்கிறார்கள். அதை வாங்க அதிக டாலர்களை கொடுக்க வேண்டி வரும் என்பதால், அந்த டாலரின் மதிப்பு குறைந்து அதன் வாங்கும் திறனும் குறையும். அதாவது 1 காலன் பால் 5 டாலருக்கு வாங்கியவர்கள், 8 டாலர் கொடுக்க வேண்டி வரும். அப்போது விலைவாசி எகிரும், மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.

மேலும் உலக நாடுகள் பல, அமெரிக்காவின் டாலரை தங்கள் ரிசர்வ் கரன்ஸியாக வைத்திருந்தது. இந்த சூழலில் டாலர் மதிப்பு குறையும் என்பதால், அவர்கள் யூரோ டாலரையோ, அல்லது இந்திய ரூபாயையோ அல்லது தங்கத்தையோ வாங்கி டாலரை மேலும் சந்தையில் விற்பார்கள். அப்போது டாலரை வாங்க ஆளில்லாததால், டாலர் தேவை குறைவதால், விலை மேலும் வீழும். இந்த சூழலில் அமெரிக்காவில் ஏற்கெனவே Recession மூலம் தொழில்கள் சரிந்து வேலை இழப்புகள் ஏற்படுதால் அவர்களின் வாங்கும் திறனும் குறைகிறது, டாலரின் Purchase Parity யும் குறைகிறது.

கையில் காசு இருப்பவர்கள் கூட தேவையான செலவு மட்டும் செய்வதால், மேலும் மேலும் தொழில்கள் நசியும். அப்போது மேலும் வேலை இழப்புகள் நிகழும். அப்படியெனில் டாலரின் மதிப்பு மேலும் மேலும் சரியும். இந்திய ரூபாயில் I Promise the bearer to pay என்று எழுதியிருக்கும். அதாவது அவருக்கு அந்த பணத்திற்கு இணையான தங்கம் அல்லது வேறு கரன்ஸி கொடுப்போம். ஆனால் டாலர் என்பது Fiat Currency, அதில் We Trust in God என்று தான் எழுதி இருக்கிறார்கள்.அதனால் அமெரிக்க டாலர் வாங்க ஆளில்லாமல் குப்பையாகும் நாள் தொலைவில் இல்லை.

எனவே அமெரிக்கா, 40 ஆண்டுகளாக உலக நாடுகளின் ரத்தத்தையும், உழைப்பையும் திருடி வாழ்ந்த உல்லாச வாழ்க்கை கூடிய விரைவில் முடிவுக்கு வரும். அதற்கு அங்கே மன்மோகன் சிங் போல ஜனாதிபதியாக இருக்கும் பொம்மை பைடன் முக்கிய காரணம். "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிறபகல் தாமே வரும்"இந்த திருக்குறளுக்கு அர்த்தம் அமெரிக்கர்களுக்கு புரியும் போது, அவர்கள் இந்திய விசாவுக்காக க்யூவில் நிற்பார்கள்..! வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்..!!

Updated On: 18 March 2023 6:45 AM GMT

Related News

Latest News

 1. புதுக்கோட்டை
  நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
 2. கும்பகோணம்
  சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட...
 3. வேலைவாய்ப்பு
  ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
 4. சோழவந்தான்
  ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
 5. திருப்பரங்குன்றம்
  மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
 6. தேனி
  தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
 7. பவானிசாகர்
  ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
 8. இந்தியா
  36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
 9. சினிமா
  கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
 10. குமாரபாளையம்
  கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்