/* */

இந்தியாவின் ஆயுதச்சந்தையை வீழ்த்த மேற்கு உலக ஆயுதபேர வர்த்தகர்கள் வியூகம்

Arms India -இந்தியாவின் ஆயுதச்சந்தையை வீழ்த்த மேற்கு உலக ஆயுதபேர வர்த்தகர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்

HIGHLIGHTS

இந்தியாவின் ஆயுதச்சந்தையை வீழ்த்த மேற்கு உலக ஆயுதபேர வர்த்தகர்கள் வியூகம்
X

பைல் படம்

Arms India -மலேசியா நாடு, தான் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ரஷ்ய தயாரிப்பு விமானங்களுக்கு மாற்றீடு செய்ய திட்டமிட்டு அதற்கான பூர்வாங்க பணிகளில் ஈடுபட்டது. இந்நிலையில். அவர்களின் உலக அளவிலான டெண்டரில் தென் கொரியா தயாரிப்பு FA-50, பாகிஸ்தானிய JF17 மற்றும் நம் இந்திய தயாரிப்பு இலகுரக தேஜாஸ் கடைசி கட்ட தேர்வுக்கு தயாரானது.

இதில் பாகிஸ்தானிய தயாரிப்பிற்கு போதிய வரவேற்பு பாகிஸ்தானிலேயே இல்லை. இதன் அசல் மாதிரி சீன தயாரிப்பு என்பதாலும் அவர்களுமே இதனை ரஷ்யாவில் இருந்து உருவி, உருமாற்றம் செய்து அதகளம் செய்த விவகாரம் தெரிய வந்ததால். சப்தம் இல்லாமல் மலேஷியா நகர்ந்து கொண்டது.

இறுதியில் தென் கொரியா தயாரிப்பு FA-50 மற்றும் நம் இந்திய தயாரிப்பு இலகுரக தேஜாஸ் விமானங்களுக்கு மட்டுமே வாய்ப்பு இருந்தது. இந்த இடத்தில் தான் அமெரிக்கா உள்ளே நுழைந்தது. தென் கொரியா தயாரிப்பு விமானம் FA-50 என்ற போதிலும் அவர்களின் சொந்த தயாரிப்பில் உருவானது அல்ல இந்த FA-50. அமெரிக்க லாக்ஹீட் மார்டீன் நிறுவன தயாரிப்பு F16 ஃபைட்டிங் ஃபால்கன் என பெயரிடப்பட்ட விமானத்தை அவர்களின் வழக்கமான பாணியில் இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து தென் கொரியாவுக்கு தள்ளிவிட்ட விமான ரகம் தான் இது.

இன்னமும் சரியாக சொன்னால் நம் அபிநந்தன் வர்த்தமானன் வானில் வைத்து நமது அதரப்பழசான விமான ரகமான மிக்-21 மூலமாக சுட்டு வீழ்த்திய அதே விமான ரகம் தான் இந்த FA-50.

ஆனாலும் கூட அமெரிக்க உளவு துறை மலேஷியாவை தொடர்பு கொண்டு. விவரம் கேட்டு, நாம் குறித்து கொடுத்த 3.75 பில்லியன் தொகைக்கு கீழாக தென் கொரியா தயாரிப்பு விமானங்களை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்ற பார்த்திருக்கிறார்கள். அதாவது 18 விமானங்களுக்கான ஆரம்ப கட்ட விலை 3.50 பில்லியன் டாலர்கள். இதில் பொருத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் சேவை கட்டணம் தனி. ஆக மொத்தம் சேர்த்து 4.25 பில்லியன் தொகைக்கு என கொண்டு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் மலேசியா 3.5 பில்லியன் தொகைக்கு மேல் ஒத்த பைசா கிடையாது என்று கை விரித்து விட்டது.அதேசமயம் இந்திய தயாரிப்பு இலகுரக தேஜாஸ் விமானங்களையும் அதே விலையில் கேட்க நம்மவர்கள் இதற்கு உடன்படாததால் விவகாரம் இழுபறியில் இருக்கிறது.

இந்த சமயத்தில் பிலிப்பைன்ஸ் உள் நுழைந்து. அடேய் பைத்தியக்கார மலேசியா. நாங்கள் FA-50 ரக விமானம் 43 வாங்கி வைத்துள்ளோம். அத்தனையும் காற்று வாங்கிக் கொண்டு உள்ளது. வேண்டுமானால், இதை அப்படியே உனக்கு தருகிறோம் என சொல்ல. இந்த விஷயம் இன்னமும் விவகாரம் ஆனது.

ஏன் என்னவாயிற்று என்று விசாரித்து பார்த்தால்..பிலிப்பைன்ஸ்காரர்கள் கதை கதையாக சொல்கிறார்கள். அது பறந்த விதமும்.. அது ஏற்படுத்திய விபத்தும். அதற்கான செலவும் என ஏகப்பட்ட விஷயங்களை அடுக்கிக்கொண்டே போயிருக்கிறார்கள்.போதாக்குறைக்கு நம் அபிநந்தன் வீழ்த்திய பிறகு, அந்த ரக விமானங்களுக்கு மார்கெட் போனது. ஆதலால் இதன் உதிரி பாகங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட உலக அளவில் இந்த ரக விமானங்களை இயக்க பல சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தான் பாகிஸ்தான் வசம் உள்ள 82, F16 விமானங்களை மேம்படுத்தி தர வாண்டட்டாக வந்து வண்டியில் ஏறியிருக்கிறது அமெரிக்கா. அதாவது நம் இந்திய தேசத்திற்கு மலேசியா மூலம் வர வேண்டிய ஆர்டரை தடுத்து நிறுத்த போய் இன்று பாகிஸ்தானுக்கு வலிய வந்து உதவ வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. போதாக்குறைக்கு பத்து மடங்கு அதிக தொகைக்கு. இனாமாகவும் கொடுக்க முடியாமல். கடன் என்று சொல்லவும் முடியாமல் முழி பிதுங்கி விழித்துக் கொண்டு நிற்கிறது.

நமட்டு சிரிப்புடன் இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த இந்தியா, தங்களின் அடுத்த கட்டமாக காய்களை நகர்த்துவதைப் பார்த்து, தலையில் அடித்து கொண்டு இருக்கிறார்கள் அமெரிக்கர்கள்.

வேறொன்றும் இல்லை.. மலேஷியாவிடம், இந்தியாவிடம் வாங்கும் தேஜஸ் ரக விமானங்களின் மதிப்பு பணமான 3.75பில்லியன் தொகைக்கு ஈடாக பாமாயில் இறக்குமதி செய்து கொள்கிறோம். சம்மதமா உனக்கு. எப்படி வசதி என்று கேட்க. உடனடியாக முகத்தில் பல்பு ஒளிர ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்.

இதன் மூலம் இரட்டை லாபம் இருவருக்கும். ஏற்கெனவே உலக அளவில் எண்ணெய் தாவர வித்துகளுக்கும், சமையல் எண்ணெய் தேவைகளும் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், கட்டுப்பாடான விலையில் எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள முடிவதுடன், லேசியாவிற்கும் தேவையான அவர்கள் விரும்பும் இலகுரக தேஜாஸ் விமானங்களையும் கொடுக்க முடியும்.

கூடவே தேஜாஸ் விமானங்களில் ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களையும். இந்திய தயாரிப்பு ஆயுதங்களையும். இஸ்ரேலிய தயாரிப்புகளையும். நேரிடையான அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களையும் இந்த இலகுரக விமானங்களில் உடனடியாக பொருத்தி பயன்படுத்த முடியும் என்பது இதில் உள்ள கூடுதல் சிறப்பம்சங்கள். ஏனெனில் இன்றளவும் உலக அளவில் நாம் மட்டுமே இவற்றை எல்லாம் அதாவது பன்னாட்டு ஆயுதங்களை எல்லாம் பொருத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றோம்.

தற்போது, இந்த இடத்தை எப்படி உடைப்பது என அமெரிக்க உளவு துறை வட்டாரங்களில் மண்டையை உடைத்து கொண்டு இருக்கிறார்கள். ஏனெனில் பாகிஸ்தானுக்கு அவர்கள் தருவதாக சொன்ன F16 மேம்படுத்தல் திட்டம் தற்போது உள்ள சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு வேண்டாத சங்கதியாக பார்க்கப்படுகிறது. இதனை எப்படி தடுத்து நிறுத்துவது என அவர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த மேம்படுத்தலை தற்போதைக்கு செய்ய இயலாது என்று சொல்லி தப்பித்து கொள்ள முடியாது. காரணம் நம்மவர்கள் அப்படி ஒரு கோரிக்கையை முன்வைக்கவில்லை. அதேசமயம் அமெரிக்க பாதுகாப்பு சபை வேறு இதற்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் அமெரிக்க செனட் சபை வாக்கெடுப்பில் விட்டு தடுக்க வேண்டும். அல்லது வெள்ளை மாளிகை உத்தரவு கொடுத்து தடுத்து நிறுத்த வேண்டும். இவற்றில் எதை செய்தாலும் அமெரிக்க மானம் காற்றில் பறக்காமல் போகாது. இடியாப்ப சிக்கலுக்குள் திணற ஆரம்பித்து இருக்கிறது பைடன் நிர்வாகம்.

ஏனெனில் தற்போதைக்கு எகிப்து உடனான இலகுரக தேஜாஸ் விமானங்கள் மற்றும் அதனுடனான பிரமோஸ் ஏவுகணைகள் விற்பனை செய்ய ஒப்பந்தம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனை எப்பாடுபட்டாவது தடுக்க முடியாமா என மோட்டு வளையை பார்த்து கொண்டு இருக்கிறது அமெரிக்கா.

முன்பை காட்டிலும் நம் இந்திய தயாரிப்பு இலகுரக தேஜாஸ் விமானங்களுக்கு சக்தி கூட்டியும், நம் இந்திய தயாரிப்பில் உருவான உலகின் முன்னணி தாக்குதல் ஏவுகணை பிரமோஸின் தாக்குதல் தூர வீச்சை அதிகப்படுத்தியும் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்து இருக்கிறோம். இந்த கூட்டணி வரும் நாட்களில் மிகப் பெரிய உலக அளவிலான ட்ரெண்ட் செட்டராக இருக்கப் போகிறது என்கிறார்கள்.

இதனோடு கூடவே ரஷ்ய தயாரிப்பு சுகோய் சூ30 விமானங்களுக்கு இந்தியாவில் மேற்கொள்ளப் படும் தர மேம்பாடு என்பது ரஷ்யாவால் கூட தற்போதைக்கு மேற்கொள்ள முடியாது என்கிறார் கள். அந்த வகையில் உலக அளவில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரஷ்ய தயாரிப்பு சுகோய் சூ30 விமானங்களுக்கு இந்தியாவால் மட்டுமே மேம்படுத்தல் செய்து தருவது சாத்தியம் என்கிற அற்புதமான இடத்திற்கு நாம் முன்னேறி இருக்கிறோம்.

உலக அளவில், ஒப்பீட்டளவில்... இந்திய ஆயுத வர்த்தக சந்தை என்பது. உலக ஏற்றுமதியில் 0.25 மட்டுமே தற்போதைக்கு இருக்கிறோம் நாம். இதே அமெரிக்கா, ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் 39.73% வருகிறார்கள்.

ஒரு வேளை நாம் இந்த வர்த்தகத்தில் வெறும் 3.5% அளவிற்கு வளர்ந்தாலே நம் இந்திய சந்தை. நம் GDP வளர்ச்சி என்பது. உலக அளவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டு விடும். இதன் மூலம் நமக்காக வர்த்தக வாய்ப்பு எத்தகையது என்பதையும் நாம் நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை தான் தடுக்க துடிக்கிறார்கள் மேற்கு உலக ஆயுத பேர வர்த்தகர்கள். ஆனால் அவர்களின் முயற்சி இனி பலிக்காது என்பதை நமக்கு இருக்கும் வாய்ப்புகள் கண் முன்னே நிற்கின்றன என்பதே உண்மை.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Sep 2022 7:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  4. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  5. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  6. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  7. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  8. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  9. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  10. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்