/* */

விவசாயிகளை அழிக்கும் வில்லன்கள் இலங்கை நிலை நமக்கும் வருமா?

Agriculture in Tamilnadu - விவசாயிகளை அழிக்கும் வில்லன்கள் இலங்கை நிலை நமக்கும் வருமா?

HIGHLIGHTS

விவசாயிகளை அழிக்கும் வில்லன்கள் இலங்கை நிலை நமக்கும் வருமா?
X

Agriculture in Tamilnadu - நம் அண்டை நாடான இலங்கையின் பரப்பு கிட்டத்தட்ட தமிழகத்தை விட சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் சென்னை மற்றும் சுற்றிலும் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையும், இலங்கையின் மக்கள் தொகையும் சமமாக உள்ளது. இலங்கையின் மக்கள் தொகையினை விட தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை மூன்று மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.

வளமானா நாடான இலங்கையில் இப்போது கடும் உணவுத்தட்டுப்பாடு நிலவுகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த நாட்டில் மக்கள் தினமும் இரண்டு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும் என அதிபரும், பிரதமரும் மாறி, மாறி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனை பார்த்த தமிழக மக்கள் மனதில் சற்று அச்சம் காணப்படுகிறது. தமிழகத்தில் விவசாயம் வீழ்ந்து விட்டால், உலகில் பெரிய மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் நிலைமை என்னவாகும் என புலம்புகின்றனர். எச்சரிக்கின்றனர். ஆனால் எதுவும் பலன் தராது.

விவசாயிகளை காப்பாற்ற கருணாநிதி இலவச மின்சார திட்டம் கொண்டு வந்தார். உழவர்சந்தை திட்டம் கொண்டு வந்தார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து மானிய விலையில் விதைகள் வழங்குகின்றன. விவசாய சாகுபடிக்கு தேவையான கடன் முதல் அத்தனை உதவிகளையும் வழங்குகின்றனர். ஆனாலும் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரவேயில்லை. காரணம் விவசாயிகள் முழுக்க, முழுக்க இடைத்தரகர்களின் பிடியில் சிக்கி உள்ளனர்.

நெல்லுக்கு கூடுதல் கொள்முதல் விலை கொடுத்து, ஒரு மாவட்டத்திற்கு 15 முதல் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை அரசு அமைத்தும், இடைத்தரகர்கள் பல்வேறு நாடகங்களை நடத்தி, அரசு கொள்முதல் நிலையங்களுக்கு நெல் போய் சேராமல் பார்த்துக் கொண்டனர். ஒரே ஒரு இடைத்தரகர் மட்டும் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் விளைந்த நெல்லை வாங்கி, 30 நாளில் 40 லட்சம் ரூபாய் நெல் வியாபாரத்தில் சம்பாதித்துள்ளார்.

இதேபோல் அத்தனை விளைபொருட்களையும் இடைத்தரகர்கள் கைப்பற்றி, அவர்களே விலை நிர்ணயம் செய்து, கமிஷன் எடுத்துக் கொண்டு விவசாயிகளுக்கு ஏதோ பெயரளவிற்கு பணம் தருகின்றனர். இதனை எத்தனை வலிமையான அரசாங்கம் வந்தாலும் தடுக்கவே முடியவில்லை. உலகின் வலிமையான தலைவராக கருதப்படும் மோடியையே பஞ்சாப் இடைத்தரகர்கள் பாடாய்படுத்தி, விவசாய சட்டங்களை வாபஸ் பெற வைத்து விட்டனரே... இவர்களை யார் தான் கட்டுப்படுத்துவது.

தற்போது விஷயத்திற்கு வருவோம். கத்தரி முதல் நெல் வரை விளையும் எந்த பொருளாக இருந்தாலும், கமிஷன் வியாபாரிகள் (இடைத்தரகர்கள்) மூலம் விற்பனை நடைபெறும் வரை விவசாயிகளை காப்பாற்றுவது இயலாத காரியம். என்றைக்கு விவசாயிகளே தங்கள் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்கிறார்களோ அன்று தான் விவசாயிகள் சிறிதளவாவது லாபம் பார்க்க முடியும். லாபம் பார்த்தால் மட்டுமே அவர்கள் விவசாயத்தை தொடர்வார்கள். விவசாயிகள் வாழ்ந்தால் மட்டுமே நாடு செழிக்கும்.

தற்போதைய நிலையில், மூன்று முதல் நான்கு மாதம் படாத பாடுபட்டு, கடன் வாங்கி, உழைத்து கடும் வேலைகளை செய்து விளைவித்த விவசாயி 100 ரூபாய் சம்பாதிக்கும் முன்னர், அவரிடம் விளைபொருளை வாங்கி விற்கும் வியாபாரி ஓரிரு நிமிடங்களில் அந்த பொருள் மூலம் 200 ரூபாய் சம்பாதித்து விடுகிறார். ஆக நியாயமாக விவசாயிக்கு வர வேண்டிய லாபம் அந்த இடைத்தரகர்களுக்கு போய் விடுகிறது.

எந்த அரசு வந்தாலும் இந்த நடைமுறையினை மாற்றவே முடியவில்லை. இந்த நடைமுறையினை மாற்றும் வரை விவசாயிகள் சம்பாதிக்கவும் வழியில்லை. நஷ்டத்தில் இருந்து மீளவும் வழியில்லை. சமீபகாலமாக சின்னவெங்காயம் விளைவித்த விவசாயிகளில் ஒருவர் கூட லாபம் பார்க்கவில்லை. ஏற்கனவே மிகவும் கடினமான தொழிலாக மாறி வரும் விவசாயத்தை விட்டு பலரும் வெளியேறி வருகையில், விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்க நாள் குறைந்து வரும் நிலையில், இருக்கும் ஒருசிலரையும் நாம் இழந்து விட்டால், (இதனை விட பொருத்தமான வார்த்தை, இடைத்தரகர்களுக்கு பலி கொடுத்து விட்டால்) நிச்சயம் இலங்கை நிலைமை தான் நமக்கும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 15 Jun 2022 10:25 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...