/* */

அமெரிக்கா- இந்தியா ராஜதந்திர போர் ! எடுபடுமா ஜெய்சங்கர் வியூகம் ?

India US News -அமெரிக்கா- இந்தியா இடையே நடக்கும் ராஜதந்திர போர் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது

HIGHLIGHTS

அமெரிக்கா- இந்தியா ராஜதந்திர போர் ! எடுபடுமா  ஜெய்சங்கர் வியூகம் ?
X

File- Picture

India US News -அமெரிக்கா பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க தயாரிப்பு எப் 16 விமானங்களை மேம்படுத்த செய்த உதவி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உரசலை செய்திருக்கின்றது. இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இதுபற்றி அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டினிடம் போனிலே விளக்கம் கேட்க விவகாரம் வெடித்தது.

எனினும் இந்த உதவி இந்தியாவுக்கு எதிரானது அல்ல என அமெரிக்கா சொன்ன உறுதிமொழி யில் இந்தியா திருப்தி அடையவில்லை. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு என உஸ்பெக்கில் புட்டினோடு மோடி கைகுலுக்கியதை ரசிக்காத அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு இப்படி உதவிக்கரம் நீட்டி உள்ளது.

இந்திய தரப்போ தங்கள் நியாயத்தை எடுத்து சொன்னது. குவாட் அமைப்பில் இருப்பதால் சீனாவுடன் மோடி நேருக்கு நேர் பேசவில்லை என்றும், போரை நிறுத்தத்தான் மோடி வலியுறுத்தினார் என்றும், இது பூகோள ரீதியான அரசியல் என்றும் எடுத்து சொன்னது.

இந்தியா தான் ரஷ்யாவுக்கும் நட்புநாடு அமெரிக்காவுக்கும் நட்புநாடு என்று இருப்பதை ஏற்காத அமெரிக்கா ராஜதந்திரமாக திருப்பி அடிக்க இடம் பார்த்து காத்திருந்தது. ஐநா மாநாட்டில் பேச அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பெரும் வாதமே புரிந்தார். ஐநாவில் அவரின் உரையும் அமெரிக்காவின் ஊடகங்கள் மோடி அரசை ஒருதரப்பாக விமர்சிப்பதையும் அவர் கண்டித்தார்

அவருக்கு பதில் சொன்ன அமெரிக்கா, பாகிஸ்தானும் இந்தியாவும் எமக்கு நட்பு நாடுகள், இரண்டையும் குழப்ப கூடாது என சொல்லி புன்னகைக்கிறது. உக்ரைன் போரில் பாகிஸ்தான் அமெரிக்க பக்கம் சாய்ந்த நிலையிலும், ஆப்கானில் அவ்வப்போது தாக்ககவும் பாகிஸ்தான் ஆதரவு அவர்களுக்கு தேவை. அதே நேரம் இந்தியா எனும் சக்திமிக்க நாட்டை இழக்கவும் அவர்கள் தயாரில்லை. இந்தியா சீனாவை எதிர்க்கும் முக்கிய நாடு என்பதே முக்கிய காரணம்.

இதனால், இந்தியாவினை வழிக்கு கொண்டுவர சில நாடகங்களை செய்கின்றார்கள், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கும் நல்லது. ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கும் நல்லது. ஆனால் இதை கைவிடச் சொல்கிறது அமெரிக்கா. இந்தியா அதற்கு செவிமடுக்கவில்லை. இதனால் பழைய ஆட்டங்களை முன்னெடுக்கின்றது. அதே நேரம் சீனாவுக்கு லாடம் கட்ட இந்தியாவின் தயவும் அமெரிக்காவுக்கு அவசியமாகின்றது.

இந்தியாவினை அமெரிக்கா சுருட்டி தன் வழிக்கு இழுப்பதும், இந்தியா அமெரிக்காவினை தனக்கு சாதகமாக வளைப்பதும், அதில் கடுப்பான அமெரிக்கா பாகிஸ்தானை தொடுவதும் , அப்படி தொட்டால் சீனாவினை இந்தியா கைகாட்டுவதுமாக ஒரு சதுரங்க ஆட்டம் நடக்கின்றது.

இது எப்படி முடியும் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு. என்ன இருந்தாலும் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் வாதமும், அவர் லாபி செய்யும் விதமும், அவர் மிகபெரிய ராஜதந்திரி என்பதை உறுதிப்படுத்தி வருகிறது. இந்திய வரலாற்றில் முத்திரை பதித்த ராஜதந்திரி ஒருவர் மோடி அரசில் இருக்கின்றார் என்பதை உலகுக்கு தெளிவாக சொல்லிக்கொண்டிருக்கின்றது. உலக அரங்கில் இப்போது அதிகம் கவனிக்கப்படுவது அந்த தமிழனின் அறிவார்ந்த நியாயமான வாதங்கள்தான் என்பதே நிதர்சனம்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Sep 2022 5:27 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!