/* */

தமிழ்சினிமாவில் வரலாறு படைத்த உலகம் சுற்றும் வாலிபன்

சுவரொட்டி ஒட்டாமலேயே வெற்றி பெற்று தமிழ் சினிமா வரலாற்றினை மாற்றிய எழுதிய முதல் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன்.

HIGHLIGHTS

தமிழ்சினிமாவில் வரலாறு படைத்த உலகம் சுற்றும் வாலிபன்
X

பைல் படம்

திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் 50 நாள், 45 தியேட்டர்களில் 75 நாள் , 25 தியேட்டர்களில் 100 நாள், 7 தியேட்டர்களில் வெள்ளி விழா என தமிழ் திரையுலகை புரட்டிப் போட்டு, தமிழ் சினிமாவில் வரலாறு ஏற்படுத்திய சினிமா இது. எம்.ஜி.ஆர்., தயாரித்து, நடித்து, மே 11, 1973ல் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்தின், பொன் விழா ஆண்டில் அது பற்றி பார்க்கலாம்.

உலகம் சுற்றும் வாலிபன் பட வேலைகள் முடிந்து, வெளியீட்டு தேதியை, எம்.ஜி.ஆர்., அறிவித்ததும், ஏவி.எம்., நிறுவனம் முந்திக் கொண்டது. என்.எஸ்.சி., ஏரியா எனப்படும். வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு பகுதிகளுக்கான விநியோக ஒப்பந்தம், முதன் முதலில், ஏவி.மெய்யப்ப செட்டியாரோடு கையெழுத்தாகியது. 'எக்ஸ்போ 70ல் எடுக்காவிட்டால், எனக்கு அதன் விநியோக உரிமை வேண்டாம்...' என, நிபந்தனை விதித்தார், ஏவி.எம்.,

படப்பிடிப்புக்காக, ஜப்பான் செல்வதற்கு முன், ஏவி.எம்.,மை சந்திக்க சென்றார், எம்.ஜி.ஆர்., ஜப்பானில், காசு செலவழிப்பது மற்றும் சிக்கனமாக இருந்து சினிமா எடுப்பது எப்படி என்றெல்லாம் ஆலோசனை வழங்கினார். ஏதோ மரியாதை நிமித்தமாக சொல்கிறார் என கேட்டுக் கொண்டார். ஆனால், ஜப்பான் கிடைத்த அனுபவத்தில், மெய்யப்ப செட்டியார் சொன்னவை அனைத்தும் சத்தியம் என, புரிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்..

எம்.ஜி.ஆரின் அசாத்திய திறமையால், எடுத்த காட்சிகளுக்கேற்ப திரைக்கதை அமைத்து, ஒரு நிறைவான சினிமாவாக தயார் நிலையில் இருந்தது. பாங்காக், ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட காட்சிகள் தெளிவில்லாமல் இருந்ததால், மீண்டும் வெளிப்புற காட்சிகளை, 'இன்டோரில் செட்' அமைத்து படமாக்கினார், எம்.ஜி.ஆர்., பன்னிரெண்டு லட்ச ரூபாய் செலவில், 30 அரங்கங்கள், ஏழு மினியேச்சர்கள் பயன்படுத்தப்பட்டன. 'கிளைமாக்சில்' ஜப்பான் ஹில்டன் ஹோட்டல் போல, 'செட்' போடப்பட்டது. 'அவள் ஒரு நவரச நாடகம்...' பாடல் காட்சியில், சில, 'மேட்சிங் ஷாட்'களை, சத்யா ஸ்டுடியோவில் பிரமாண்ட நீச்சல் தொட்டியில் எடுக்க செய்தார்.

எம்.ஜி.ஆர்., உலகம் சுற்றும் வரலிபன் படத்தில், பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜனுக்கு வாய்ப்பு வழங்கவில்லையே என்று நினைத்த எம்.ஜி.ஆர், அவருக்காக, புதிதாக, 'டைட்டில் சாங்' எடுக்க ஏற்பாடு செய்தார். பாடல் பதிவின் போது, அப்பாடலை பாடியவாறு, திரையை நோக்கிய சீர்காழி கோவிந்தராஜனுக்கு ஆச்சரியம். பின்னணி பாடகர் பட்டியலில், கோவிந்தராஜனின் பெயரும் ஓடிக் கொண்டிருந்தது.

உலகம் சுற்றும் வாலிபன் பட வெளியீட்டின்போது, சுவரொட்டிகளுக்கு இருந்த வரி, ஐந்து மடங்காக அன்றைக்கு உயர்த்தப்பட்டது. "போஸ்டர்களே ஒட்ட வேண்டாம். அச்சடித்தவை அப்படியே இருக்கட்டும். சென்னை நகரத்தை பொறுத்தவரை, சுவர்களில் என் போஸ்டர்கள் இல்லாமலே இருக்கட்டும். படம் ஓடினால், இதுவும் ஒரு புரட்சி தான். 'பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லைன்னு சொல்வாங்க. நீங்களெல்லாம் நஷ்டப்பட்டா, அதை பணமாகவும் தருகிறேன். இல்லை, அடுத்த படத்தில், 'அட்ஜஸ்ட்' செய்கிறேன். நான் சொல்வதை போல் வெற்றியடைஞ்சுட்டா, உங்ககிட்ட கேட்க மாட்டேன்...என்று விநியோகஸ்தர்களிடம் உறுதியளித்தார் எம்.ஜி.ஆர்.

மே 9, 1973 முதல், சென்னை, தேவி பாரடைசில் ரிசர்வேஷன் ஆரம்பமானது. இரண்டே நாளில், ஜூன் 15 வரைக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அவ்வாறு, 227 காட்சிகள். சுமார், 10 வாரங்கள் தொடர்ந்து, 'ஹவுஸ்புல்!'. மே 11ல், பல எதிர்ப்புகளையும், தடைகளையும் மீறி, உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியானது. வெளியீடுக்கு முன், கலைத்துறையின் ஒவ்வொரு இலாகாவுக்கும் தனித்தனியே படம் போட்டு காட்டுவது சம்பிரதாயம். ஆனால், ஒட்டுமொத்த திரையுலகுக்கும் தேவி பாரடைசில், சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர்.,

சுவர் விளம்பரம் இல்லாமலேயே சென்னையில், உலகம் சுற்றும் வாலிபன் படம், வசூலில் இமாலய சாதனை புரிந்தது. தேவி பாரடைசில் மட்டும், 182 நாட்களில், 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் வசூலானது. இந்தியாவிலேயே, ஒரே தியேட்டரில், மிக அதிக வசூலை வாரிக் குவித்த, முதல் இந்திய படம் அதுதான். மதுரையில், அதிகபட்சமாக, மீனாட்சி திரையரங்கில், 200 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. 31 தியேட்டர்களில், 100 நாட்களை வெகு எளிதில் தொட்டது. இதுவரையில், தமிழ் சினிமாவில் யாரும் முறியடிக்காத, அரிய சாதனை இது ..

Updated On: 13 May 2023 8:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  3. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  4. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  5. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  8. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  9. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  10. ஈரோடு
    கோடை விடுமுறை கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!