Begin typing your search above and press return to search.
கம்பத்தில் டூவீலர் நிலை தடுமாறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
கம்பத்தில் டூ வீலர் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS

தேனி மாவட்டம், கம்பம் மாலையம்மாள்புரத்தை சேர்ந்தவர் செல்வம், 25. இவர் டூ வீலர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். தனது டூ வீலரில் உத்தமபாளையம் வந்து கொண்டிருந்தார்.
கம்பம் அரசு போக்குவரத்துக்கழக டிப்போ அருகே டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் மோதி விழுந்தது. பலத்த காயமடைநந்த செல்வம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.