/* */

சுகாதார தொழில் நுட்ப பிரிவில் வேலை வாய்ப்பு

தேனி மாவட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் சுகாதார தொழில் நுட்ப பிரிவில் பணியிடம் உள்ளது.

HIGHLIGHTS

சுகாதார தொழில் நுட்ப பிரிவில் வேலை வாய்ப்பு
X

தேனி மாவட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் எம்.எஸ்.எம்.இ மூலமாக சுகாதார தொழில் நுட்ப பிரிவில் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சுகாதார தொழில் நுட்ப பிரிவுகளில் ஒரு மாத காலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரும் வரை பயிற்சியுடன் கூடிய பணியிடம் வழங்கப்படுகிறது.

எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னிசியன், ஜெனரல் டியூட்டி அசிஸ்டன்ட், ஜெனரல் டியூட்டி அசிஸ்டன்ட் ( தீவிர சிகிச்சை பிரிவு ), ஹோம் ஹெல்த் எய்ட், மெடிக்கல் டெக்னாலஜி அசிஸ்டன்ட், பிளேபோடோமிஸ்ட் ஆகிய ஆறு பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கபட உள்ளன.

இந்த பயிற்சிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம். 8 மற்றும் 10 -ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவராக இருந்தால் வேண்டும்.

விருப்பம் உள்ள நபர்கள் நபர்கள் தங்களின் பெயர், கல்வி தகுதி , தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

dstotheni@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 8870282856 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவோ, உதவி இயக்குநர், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம், மதுரை ரோடு, தேனி என்ற முகவரியில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 9443153291, 8870282856, 8838719738 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 30 May 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?