/* */

'பொன்னியின் செல்வன்' படத்தின் பெயரை PS-1 என பெயரளவில் கூட பேசக்கூடாது

Aponniyin Selvan Tamil Movie- 'Ponniyin Selvan' tamil picture, should not even be mentioned as PS-1'பொன்னியின் செல்வன்' படத்தின் பெயரை PS-1 என பெயரளவில் கூட பேசக்கூடாது என தமிழக மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

பொன்னியின் செல்வன் படத்தின் பெயரை PS-1 என பெயரளவில் கூட பேசக்கூடாது
X

Aponniyin Selvan Tamil Movie-'Ponniyin Selvan' tamil picture, should not even be mentioned as PS-1மேடைகளில் சில வேளையில் இயக்குனர் மணிரத்னம், 'பொன்னியின் செல்வன்',எனும் அருமையான தமிழ்ப் பெயரை PS-1 என உச்சரிக்கும் பொழுது வருத்தமாத்தான் இருக்கும்.

எம்.ஜி.ஆரிடம் தொடங்கி, கமலிடம் திரும்பி மணிரத்னம் கையில் வந்து முடிந்தும் விட்டது. 120 நாட்களில் படப்பிடிப்பை முடித்ததும் பெரும் சாதனைதான். புத்திசாலித்தனமான திட்டமிடல் இல்லாமல் இதுவெல்லாம் சாத்தியமேயில்லை.

சாதாரண ஒரு சண்டைக் காட்சியைக் கூட 35 நாட்களில் எடுத்து தயாரிப்பாளர்களின் தலையில் துண்டைப் போட்டவர்களின் கண் எதிரே இவ்வளவு பெரிய சாதனையினை நிகழ்த்தி காட்டி அவர்களை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இயக்குனர் மணிரத்னம்.


ஒரு வேளை இந்தப் படத்தை எம்.ஜி.ஆரே வெற்றிப்படமாக ஆக்கியிருந்தார் என்றால் தமிழ்நாட்டிற்குள்ளேயே தான் சுருங்கிப்போயிருக்கும்.வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தைப் பற்றி வடமாநிலத்தவர்களை கேட்டுப் பாருங்கள். ஒருவருக்கும் தெரியாது. அப்படித்தான் பொன்னியின் செல்வனும் ஆகியிருப்பான். காலம் கடந்ததும் நன்மைக்கே என நினைக்க தோன்றுகிறது.

'Ponniyin Selvan' tamil picture, should not even be mentioned as PS-1உலகமே கையடக்கத்தில் வந்து விட்ட காலத்தில், 'பொன்னியின் செல்வன்',வெளியாகவிருப்பது சிறப்பான ஒன்று தான். ஒரு புகழ்ப்பெற்ற தமிழ் நாவல் சினிமா மூலமாக உலகம் முழுமைக்கும் தெரியப் போகிறது. இப்படியிருக்கும் காலச்சூழலில், 'பொன்னியின் செல்வன்', எனும் அழகான தமிழ்ப் பெயரை அப்படியே மற்ற மொழிகளுக்கும் தெரியப்படுத்துவது தானே முறை.

உலகசினிமா திரைப்படங்களின் தலைப்பை எல்லாம் பொருள் கெடாமல் அப்படியே ஆங்கிலத்தில் மாற்றி நமக்குத் தருகிறார்களே! சில திரைப்படங்களின் பெயர்களை மாற்றாமலேயே வெளியிடுவார்கள்.வாயில் நுழையாத அந்தப் பெயரைக் கூட கஷ்டப்பட்டு உச்சரிக்கத்தானே செய்கிறோம்.அதே போல்,'பொன்னியின் செல்வன்',திரைப்படத்தின் பெயரையும் மாற்றாமல் வெளியிட்டால்தான் அந்தப் புகழ் பெற்ற நாவலைப் படைத்த கல்கிக்கும் பெருமையை சேர்க்கும்.

'பொன்னியின் செல்வன்',எனும் பெயரை எப்படி Translate செய்யலாம்? PS-1 என்பதற்குப் பதிலாக, 'Son of Ponni',என்று வைத்துக் கொண்டால் பொருள் இருக்கும்.


'Ponniyin Selvan' tamil picture, should not even be mentioned as PS-1அதென்ன PS-1,அரிசி ரகத்தின் பெயரை சொல்ற மாதிரி! 'பொன்னியின் செல்வன்',எனும் தலைப்பை தமிழ்நாட்டிற்குள்ளேயே சுருக்கி விடக்கூடாது.பரந்து விரிந்து உலகம் முழுக்க, 'பொன்னியின் செல்வன்',எனும் பெயர் பரவ வேண்டும். தமிழர்களின் மனதில் மட்டும் தங்கிய, 'பொன்னியின் செல்வனை',உலகமே உச்சிமோர்ந்து கொண்டாட வேண்டும். PS-1 எனும் அர்த்தமற்ற பெயரை தூக்கி எறிய வேண்டும்.'பொன்னியின் செல்வன்! என்ற பெயருடனே படம் வலம் வர வேண்டும் என்பது சினிமா ரசிகர்களின் வேண்டுகோள் மட்டும் அல்ல நம் தாய் மொழி தமிழுக்கு நாம் செய்யும் மரியாதையும் ஆகும். இதனை சம்பந்தப்பட்ட திரைத்துரையினர் தமிழ் மக்களின் வேண்டுகோளாக ஏற்று செயல்படவேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Sep 2022 10:43 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...