/* */

கதாசிரியர் சோலைமலையை கட்டி பிடித்த சிவாஜி கணேசன்

மதுரையில் இருந்தபோது தன் குடும்பத்தில் நடந்த உண்மைக் கதைக்கு வடிவம் கொடுத்து கதை - வசனத்தை எழுதி முடிக்கிறார் சோலைமலை

HIGHLIGHTS

கதாசிரியர் சோலைமலையை கட்டி பிடித்த சிவாஜி கணேசன்
X

பாகப்பிரிவினையில் சிவாஜி கதாபாத்திரம்.

மதுரையில் இருந்தபோது தன் குடும்பத்தில் நடந்த உண்மைக் கதைக்கு வடிவம் கொடுத்து கதை - வசனத்தை எழுதி முடிக்கிறார் சோலைமலை.

"இக்கதையில் சிவாஜிக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கொடுக்க வேண்டுமே என்று இரண்டு மூன்று நாட்களாக யோசிக்கிறார். இதற்கிடையில் குடும்பத்துடன் கம்பெனி காரில் மாமல்லபுரம் செல்கிறார். பிள்ளைகளை மாமல்லபுரச் சிற்பங்களைப் பார்க்க அனுப்பி விட்டு சோலைமலை தன் மனைவியுடன் ஓர் இடத்தில் உட்கார்ந்து சிவாஜியின் கதாபாத்திரத்தைப் பற்றி சிந்திக்கிறார்.

அப்போது, சிறுவன் ஒரு கை ஊனமாகவும் இரண்டு கால்கள் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டு தவழ்ந்து வந்து இவர்களிடம் வாழ்வாதாரத்திற்காக பணம் கேட்கிறார். தவழ்ந்து வரும்போதே வச்ச கண்ண எடுக்காமா அவனையே பார்க்கிறார், இதைக்கண்ட சோலைமலையின் மனைவி, "என்னாங்க அவனையேப் பாக்குறீங்க, ஏதாச்சும் இருந்தா கொடுத்து அனுப்புங்க' என்று சொல்ல, சோலைமலை பத்து ரூபாயைக் கொடுக்கிறார்.

உடனே மனைவி என்னங்க 10 ரூபாயை போடுறீங்க என்று கேட்க, "பரவாயில்ல, கஷ்டப்படுகின்ற ஆளுக்குதானே கொடுக்கிறோம், ஆனால், இந்தப் பத்து ரூபாய் எத்தனையோ பேருக்கு லட்சங்கள் சம்பாதிச்சுக் கொடுக்கப்போகுது' என்கிறார் சோலைமலை. சிவாஜிக்கான கதாபாத்திரம் சற்று மாறுதலுடன் மாமல்லபுரத்தில்தான் உருவானது.

மகிழ்ச்சியாக இருந்த அண்ணன் தம்பிகளான வைத்தியலிங்க மூப்பனார், சுந்தரலிங்க மூப்பனார், மகன் கண்ணையா மூப்பனார் ஆகியோர் அடங்கிய கூட்டுக் குடும்பத்தை எம்.ஆர்.ராதா தனது சதியால் பிரிக்கிறார். இறுதியில் சிவாஜியின் கையும் காலும் சரியாகிறது, பிரிந்த குடும்பம் ஒன்று சேருகிறது. இதுதான் கதை.

'பாகப்பிரிவினை' படத்துக்கான முழுக்கதையையும், வசனத்தையும், கதாபாத்திரங்களின் பெயர்களோடு ராயப்பேட்டை அஜந்தா பஸ் ஸ்டாப்புக்கு அருகில் இருந்த சந்திரா லாட்ஜில் ரூம் எடுத்து எழுதி முடித்து கதை சொல்வதற்காக சோலைமலையும் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியும் சிவாஜி வீட்டிற்குச் செல்கிறார்கள். வீட்டில் சிவாஜியோடு, எம்.ஆர். சந்தானம் (சந்தானபாரதியின் தந்தை) மோகன் ஆர்ட்ஸ் மோகன், தயாரிப்பாளர் பெரியண்ணா, ஏ.பி.நாகராஜன், சில நண்பர்கள், இவர்களோடு பைனான்ஸியர்களும் கதை கேட்பதற்கு ரெடியாக இருக்கிறார்கள்.

கதையைக் கேட்டவுடன் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அபிப்ராயத்தைச் சொல்ல, ஏ.பி.நாகராஜன் மட்டும் இக்கதையைப் படமாக எடுக்கலாம், நிச்சயமாக வெற்றி பெறும் என்று சொல்கிறார். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்ட சிவாஜி எழுந்து உள்ளே செல்கிறார். இதைக்கண்டவுடன் சோலைமலைக்கு ஒரே பதற்றம், ஆனால், பதினைந்து நிமிடங்கள் கழித்து, இடது கையை மடக்கி வைத்துக் கொண்டு, அழுக்கு வேட்டி கட்டிக் கொண்டு கண்ணையா மூப்பனாராகவே (படத்தில் கதாபாத்திரத்தின் பெயர்) மாறி வெளியே வருகிறார். இதைப்பார்த்தவுடன் பதற்றமாக இருந்த சோலைமலை கண்களில் ஆனந்தக் கண்ணீர், சிவாஜியைக் கட்டித் தழுவி "என்னுடைய கண்ணையாவை இங்கேயே பார்த்துட்டேன், இனிமே படம் எடுத்தா என்ன எடுக்காட்டி என்ன' என்று சொல்ல, உடனே சிவாஜி "இக்கதையை படமா எடுக்குறோம்' என்று சொல்லி சோலைமலையை கட்டி தழுவினார். சோலை மலையின் கண்ணீர் அவர் முகத்தை நனைத்தது.

Updated On: 2 Oct 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...