/* */

பாட்டு சித்தர் சி.எஸ். ஜெயராமன் பற்றி தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்...

Pattu Siddhar-தமிழ் திரையுலகத்தில் பாட்டு சித்தர் என அழைக்கப்பட்ட பாடகர் ஜெயராமன் குறித்த சில அரிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

பாட்டு சித்தர் சி.எஸ். ஜெயராமன் பற்றி தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்...
X

கணீர் குரலுக்கு சொந்தக்காரரான ஜெயராமன்.

தமிழ் திரையுலகில் எத்தனையோ பாடகர்கள் வந்தாலும் அவர்களில் சிலர் மட்டும் தனிச்சிறப்பு பெற்றவர்களாக இன்று வரை திகழ்கின்றனர். அப்படி சிறப்பு பெற்ற பாடகர்களில் ஒருவர் சி.எஸ். ஜெயராமன். இவர், கலைஞர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணன். அதாவது மு.க. முத்துவின் தாய்மாமன். ஜெயராமனை பாட்டு சித்தர் அல்லது இசை சித்தர் என்று தமிழ்த் திரையுலகம் அழைக்கும். அதுவே அவரின் உயர்ந்த அடையாளம். அவரின் குரல் கம்பீரமானது மட்டுமல்ல இனிமையானதும் கூட.


1940 ஆம் ஆண்டு முதல் 1960 ஆண்டு வரை ஜெயராமன் பாடிய பாடல்கள் ஏராளம். திரையுலக ஜாம்பவான்களான எம்ஜிஆர் மற்றும் சிவாஜி ஆகியோர் பெரிதும் மதித்த பாடகர்களில் ஜெயராமனும் ஒருவர். அதிலும் சிவாஜிக்கு இவர் குரல் மீது மையல் எனலாம். இவர் குரலுக்காகவே பாடல்கள் படிவாயின. பராசக்தி படத்தில் இடம்பெற்ற கா...கா...கா பாடல், விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே பாடல், ரத்தக்கண்ணீர் படத்தில் இடம்பெற்ற குற்றம் புரிந்தவன் போன்ற பிரபலமான பாடல்கள் இவர் குரலில் வெளியாகி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தன.

1958 ஆம் ஆண்டு வெளியான சம்பூர்ண ராமாயணம் படத்தில் இவர் பாடிய சங்கீத சௌபாக்யமே... இன்றுபோய் நாளை வாராய் ஆகிய பாடல்கள் சாகாவரம் பெற்றவை. பாடகர் ஜெயராமன் குரலின் சிறப்பைச் சொல்லும் சம்பவம் ஒன்று அவரின் இளம் வயதில் நடந்தது. அதை அவரே சொல்லியிருக்கிறார். ஒருமுறை கொல்கத்தாவில் சூட்டிங். படப்பிடிப்பின் இடைவேளையில் சி.எஸ். ஜெயராமன் ஒரு மர நிழலில் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஒரு மாபெரும் ஆளுமை வருகிறார். ஆனால் அவர் யார் என்பது ஜெயராமனுக்குத் தெரியாது. வெண் தாடியோடு ஒளிபொருந்திய கண்களை உடைய அந்த முதியவர் ஜெயராமனிடம் வந்து, "ஒரு பாடல் பாடு" என்று ஆங்கிலத்தில் சொன்னார். யார் என்று தெரியாத மனிதர் பாடச் சொல்கிறார். ஜெயராமனால் மறுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவரின் தேஜஸ் இருக்கிறது.

உடனே ஒரு பாடல் பாடியிருகிறார் ஜெயராமன். பாடி முடித்ததும் அந்த மனிதர் ஜெயராமனை தட்டிக்கொடுத்து, 'தெய்விகக் குரல்' என்று சொல்லி ஆசீர்வதித்து விட்டுச் சொன்றாராம். அவரின் தொடுதல் சி.எஸ். ஜெயராமனை சிலிர்க்க வைத்துவிட்டது. அந்த மனிதர் நகர்ந்துபோனதும் சுற்றுமுற்றும் இருந்தவர்கள் ஜெயராமனை நெருங்கி 'அவர் யார் என்று தெரியுமா...' என்று கேட்டார்கள். சி. எஸ். ஜெ தெரியாது என்று சொன்னார். அப்போது அவர்கள் சொன்னபதில் சி.எஸ். ஜெயராமனை மகிழ்ச்சியிலும் சிலிரிப்பிலும் ஆழ்த்தியது. அவர் வேறு யாருமல்ல... பாரத தேசத்தின் பெருமை ரவீந்திரநாத் தாகூர்.

பக்திப்பாடல்கள் பாடுவது சி.எஸ். ஜெயராமனுக்கு மூச்சுபோல மாறிபோனது. அதற்கு சிதம்பரத்திலும் தமிழகம் முழுக்க இருக்கும் கோயில்களிலும் அவர் பாடியபோது நிகழ்ந்த அற்புதங்களே அதற்கு ஆதாரம். அந்நாளின் முதல்வர் அண்ணா, ஜெயராமனை இசைக்கல்லூரி முதல்வராக ஆக்கினார். தகுதி நிறைந்த அவர் அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாத அளவுக்கு கொள்கை சிக்கல் ஏற்பட்டதெல்லாம் தனிக் கதை.

தெய்வப் பிறவி படத்திற்கான ரிக்கார்டிங். "அன்பாலே தேடிய என்" எனத்துவங்கும் பாட்டிற்கு இடையில் 'ஹம்மிங்' பண்ணத் தேவை ஒரு பெண் குரல். பலர் ஆடிஷனுக்கு வந்திருக்கிறார்கள். ஒல்லியான ஒரு பெண்ணும் வந்திருக்கிறார். குரல் சரியில்லை என்று அவரை அனுப்ப முயற்சித்தபோது ஜெயராமன் தடுத்து அவரைப் பாட வைத்திருக்கிறார். அப்படி 'ஹம்மிங்'கில் ஆரம்பித்துப் பிரபலமானவர் பின்னணிப்பாடகியான எஸ்.ஜானகி.

எம்.ஜி.ஆருக்கு புதுமைப்பித்தன் உட்பட மூன்று படங்களுக்குப் பின்னணி பாடியிருக்கிறார். பிறகு அடுத்தடுத்துப் பத்து படங்களுக்கு மேல் இசையமைப்பாளராகிவிட்டார். அதில் ஒரு படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய ' ரத்தக்கண்ணீர்'. அப்போது ஒரு பாடலுக்கு இசையமைக்க ஜெயராமன் வாங்கிய தொகை 750 ரூபாய். ரத்தக்கண்ணீர் படத்திற்கான இசை, பாடல்கள் அனைத்திற்கும் சேர்த்து இவர் வாங்கிய தொகை பதினோராயிரம் ரூபாய்தான். "அதிலே'குற்றம் புரிந்தவன்'னு ஒரு பாட்டு வரும். பாட்டு இடையிலே எம்.ஆர். ராதாவோட குரல் இடையிடையே வசனமா வரும். ஆரம்பத்தில் இப்படிச் செய்யலாமான்னு நினைச்சப்போ பலர் மலைச்சாங்க. அந்தப் பாடல் நல்ல ஹிட்டாயிடுச்சு. இப்படி, திரையுலக பாட்டுச் சித்தர் சி.எஸ். ஜெயராமனின் பெருமைகளை கூறிக் கொண்டே செல்லலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 April 2024 5:35 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்