/* */

டாலருக்கு $ மாற்றாக உருவெடுக்கும் இந்திய ரூபாய் ₹

உலக அளவில் டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாய் உருவெடுத்து வருகிறது

HIGHLIGHTS

டாலருக்கு $ மாற்றாக  உருவெடுக்கும் இந்திய ரூபாய் ₹
X

பைல் படம்

உக்ரைன் போருக்கு பின்னால் அமெரிக்க டாலர் ( $ )மதிப்பு கூடியது. மற்ற நாடுகளின் கரன்ஸி, இந்திய ரூபாய் ( ₹ ) முதல் அதற்கேட்ப வீழ்ச்சியை கண்டது. ஆனால் மற்ற நாடுகளில், இங்கிலாந்தின் பவுன்ட் (£ ) முதல் ஐரோப்பிய யூனியனின் யூரோ (€) வரை, சீனத்தின் யுவான் கூட அடிபட்டது. ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு மற்ற நாடுகளின் கரன்ஸி வீழ்ச்சிக்கு ஏற்ப விழவில்லை. அது ஏன் என்று சொல்வதற்கு முன்பு, எப்படி டாலர் ஏறியது, அதில் பின்னால் ஒளிந்துள்ள பித்தலாட்டம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

சிறுக்கிணர் கிராமத்தில் தனியாக ஒரு கரன்ஸி பயன்படுத்துகிறோம். ஊர் பஞ்சாயத்து மொத்தம் ₹10,000 பிரிண்ட் செய்து இருக்கிறது. அதற்குள் பொருளின் விலை இருக்கும். ஆனால் உக்ரைன் போரினால் வெளியூர்களில் அரிசி விலை ஏறியதால், அரிசி மூட்டை, காய்கறிகள் எல்லாம் 20% விலை ஏறிவிட்டது. அப்படியெனில் இருக்கும் ரூபாயை வைத்து வாங்க முடியாது. கூடுதலாக ₹ 2000 வேண்டும் என்பதால் பஞ்சாயத்து தலைவர் அதை பிரிண்ட் செய்து வெளியிடுகிறார். அதாவது டாலரு (₹ )க்கான டிமாண்ட் அதிகரிக்கிறது என்பதால்.

இதுதான் உலக அளவிலும் நடக்கிறது. எங்கே போர் வந்தாலும், OPEC நாடுகள் விலையை ஏற்றிவிடும். $ 80 டாலராக இருந்த கச்சா எண்ணெய் $ 120 ஆனது. கச்சா எண்ணெயை டாலர்( $) கொடுத்துத்தான் வாங்க வேண்டும். பஞ்சாயத்து தலைவர் செய்தது போல அமெரிக்கா இலவசமாக ரூபாய் ( $ ) நோட்டுகளை அச்சடித்து அதில் ஆதாயம் அடைந்தது. இப்படித்தான் அமெரிக்கா உலக மக்களின் உழைப்பை காலம் காலமாக உறிஞ்சி வந்தது. அதனால் எல்லா நாடுகளின் கரன்ஸியும் வீழ்ந்தது. அப்படி டாலரில் விற்காத நாடுகளான ஈராக், ஈரான், லிபியாவிற்கு என்ன ஆனது என்பது உங்களுக்கு தெரியும்.

அப்படியெனில் டாலர் ($) டிமாண்ட் உலக நாடுகளுக்கு அதிகமாகும். அப்படி இருந்தால், உலகில் அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான் இந்தியா, சீனாவின் கரன்ஸிகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்க வேண்டுமே? ஏன் இல்லை?

உக்ரைன் போரினால், டாலர் வர்த்தகத்தை ரஷ்யாவிற்கு தடை விதித்தது. அது மட்டுமல்ல, உலக நாடுகளின் பண பரிவர்த்தனையை (இந்தியாவிற்குள் ரிசர்வ் வங்கி போல) செய்து வந்தது அமெரிக்காவின் SWIFT செய்தது. ஆனால் அமெரிக்கா ரஷ்யாவிற்கு தடை விதித்ததால், அது ( $ஃ டாலரை பயன்படுத்த முடியவில்லை.

அதனால் இந்தியா, சீனா தங்களது நாட்டின் பணத்தை நேரடியாக கொடுத்து வாங்கியது. அப்படியெனில் நமது ரூபாய் (₹) ரஷ்யா ஏற்றுக்கொள்ளும்போது நாம் எதற்காக டாலரை ( $ ) அமெரிக்காவிடம் இருந்து வாங்க வேண்டும்? அதனால் டாலர் ( $ )தேவை குறைந்ததால், இந்திய, சீனாவின் கரன்ஸி அதிகம் மதிப்பு இழக்கவில்லை. இருந்தாலும் மற்ற வர்த்தகம் இன்னும் டாலரில் செய்வதால், அதற்குண்டான சரிவுகளை சந்திக்கிறோம்.

ஈரான், ஈராக், லிபியா போன்ற நாடுகள் பலமற்றவை என்பதால், ராணுவ நடவடிக்கைகள் மூலம் அதை அழித்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது அமெரிக்கா. ஆனால் ரஷ்யாவும் ஒரு வல்லரசு என்பதால், அந்த வீரத்தை ரஷ்யாவிடம் காட்ட முடியவில்ல. அதே நேரம், வாங்க வேண்டாம் என்று இந்திய, சீன நாடுகளையும் தடுக்க முடியவில்லை.

சரி, இப்போது ரஷ்யாவும், அதன் ஆதரவு நாடுகளும் டாலர் ($ )பயன்படுத்த முடியாத சூழலில் ஒரு மாற்று கரன்ஸி உலக கரன்ஸியாக வேண்டும். அதற்கு ரஷ்யா ரூபிளை பயன்படுத்தலாம். ஆனால் போரில் உள்ள சூழலில் அதை செய்ய முடியாது. மேலும் பொருளாதார தடையால், அதை வாங்க அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்வராது. சீனாவை நம்ப எந்த நாடுகளும் தயாராக இல்லை. எனும்போது இரு அணிகளுக்கும் ஒரு பொதுவான ஒரு நம்பிக்கையான நாடு மட்டுமே அதை செய்ய முடியும். அதனால், இந்தியாவின் ரூபாய், உலக நாடுகளின் பொது நாணயமாக உருவெடுக்கிறது. SWIFT பதிலாக UPAY சிஸ்டம் உலகின் பொதுவாக மாறப்போகிறது.

எப்படி மற்ற நாடுகள் இதை ஏற்கும்? இன்று ரஷ்யாவிற்கு வந்த நிலை நமக்கு நாளை வராது என்பதை எப்படி சொல்ல முடியும்? ஆனால் இந்தியாவை நம்புவார்களா?

உலகில் இன்று இந்தியாதான் பல நாடுகளால் நம்பப்படுகிற நாடு. ஆஃப்ரிக்க நாடுகள் முதல், சோவியத் யூனியன், தென்கிழக்கு ஆசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் என்று எல்லாம் இந்தியாவை நம்புகிறது. மோடி நாடு நாடாக சுற்றுகிறார் என்று சொன்னபோது, அப்போது நமக்கு புரியவில்லை அதன் அர்த்தம். இன்று புரிகிறதா? உலகத்தில் ஏழை நாடுகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து தடுப்பூசியை வாங்க காசு இல்லாமல் தடுமாறியபோது, இந்தியா அவர்க்ளுக்கு இலவசமாக கொடுத்து, மகராசன் வாழ்க என்று சொன்னது ஞாபகத்திற்கு வருகிறதா? இந்தியா தன்னிடம் உள்ள கோதுமையை ஏற்றுமது செய்ய வேண்டும் என்றார்கள். சரி செய்கிறோம், ஆனால் கொழுத்த நாடுகளான உங்களுக்கு அல்ல, ஏழை நாடுகளுக்கு இலவசமாகவே கொடுக்கிறோம் என்று உணவு கொடுத்தது என்றால், உலகம் யாரை நம்பும்?

சரி, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் எற்குமா?

பொருளை விற்ற நாடுகள் கண்டிஷன் போட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது. வாங்கும் நாடுகள் கண்டிஷன் போடும் காலம்இது உலகத்தின் மிகப்பெரிய கன்ஸ்யூமர் நாம்தானே. அப்போ நம்ம கண்டிஷனுக்கு வந்தா வாங்கிறோம், இல்லாட்டி போய்க்கோ என்றால் என்ன செய்ய முடியும்?

அது மட்டுமல்ல, போர் விமானங்கள், ராக்கெட்டுகள், கப்பல்கள் கட்டும் நாடாக இந்தியா Make in India மூலம் உருவெடுத்து வருகிறது. நேற்று மொபைல் போன்களை இறக்குமதி செய்த நாம், இன்று ஏற்றுமதி செய்கிறோம். சிப் கம்பெனிகள் குஜராத்தில் வருகிறது. லித்தியம் பேட்டரி தயாரிக்க, ஆஃப்ரிக்க நாடுகள் இந்தியாவை அழைக்கிறது. அடுத்த நாம் தான் அதை பெரிய அளவில் உற்பத்தி செய்தாலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நமக்கான தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய சூழலில் டிமாண்ட் நம்மிடம் உள்ளது. அடுத்து ஏர்பஸ் உற்பத்தி இந்தியாவில் துவங்க உள்ளது.

அப்படி இது தொடர்கிறது என்றால் நாம் உலகத்தின் உச்சத்தை நோக்கி உயர்கிறோம். அதனால் உலகம் மீண்டும் இந்தியாவை சுற்றி சுழல்கிறது. அன்றைய இந்தியா முன்பு உலகத்தின் 65% GDP க்கு சொந்தக்காரனாக இருந்தது. மீண்டும் தற்போது அந்த சூழல் தான் உருவாகி வருகிறது.

Updated On: 30 Sep 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  3. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  4. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  5. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  6. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  7. வீடியோ
    No.7-ஐ சீண்டும் பஞ்சாப் நடக்க போவது என்ன ? #csk #chennai #msdhoni...
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  9. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!