/* */

கருப்பு பணத்திற்கு 'செக்' வைக்கிறதா மத்திய அரசு

டிஜிட்டல் கரன்சி மூலம் மத்தியஅரசு கருப்புபணத்தை ஒழிக்கும் முயற்சிகளை தொடங்கி விட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

HIGHLIGHTS

கருப்பு பணத்திற்கு செக் வைக்கிறதா மத்திய அரசு
X

பைல் படம்

டிஜிட்டல் கரன்சி மூலம் நாட்டில் கருப்புபணத்தை ஒழிக்கும் முயற்சிகளை மத்தியஅரசு தொடங்கி விட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான் நம் நாட்டு பணத்தை பல லட்சம் கோடி கள்ளத்தனமாக அச்சிட்ட தகவல் அறிந்த மத்திய அரசு, யாரும் எதிர்பாராத நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையினை அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த பணம், ஏற்கெனவே அச்சிட்ட பணம் இவற்றை செல்லாமல் செய்ததால் ஏற்பட்ட குழப்பம், கொஞ்சமா? நஞ்சமா?.

உலகில் பல நாடுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை முழுமையாக செய்ய முடியாத நிலையில், இந்திய அரசும், நிதி அமைச்சகமும் இந்த விஷயத்தை மிகவும் நுட்பமாக கையாண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அச்சிட்ட கள்ளப்பணம் முழுக்க வீணாகிப்போனது மட்டுமல்ல... இந்தியாவிற்குள் இருந்த பல லட்சம் கோடி கள்ளப்பணமும், கருப்பு பணமும் வீணாகிப்போனது.

இதனால் கருப்பு பணம் இந்தியாவில் ஒழிந்து விட்டது எனக்கூறவே முடியாது. காரணம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, அரசு வங்கிகளுக்கு விநியோகித்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் பல கோடி, சில தொழில் அதிபர்களிடம் கைப்பற்றப்பட்டது. வங்கிகளுக்கு சென்ற சில நிமிடங்களில் தொழில் அதிபர்களுக்கு அந்த நோட்டுகள் சென்றது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. பல வங்கி அதிகாரிகள் இந்த முறைகேடுகளி்ல கைதாகினர். ஆக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நடுத்தர மக்களும், சாதாரண ரக உயர்தட்டு மக்களும் வைத்திருந்த கருப்பு பணம் மட்டுமே வீணாகிப்போனது. அதிகார பலம், ஆளுமை பலம் பொறுந்திய பல பெரும் முதலைகள் தப்பி விட்டன என்பது அப்போதே புரிந்து போனது.

இருப்பினும் மத்திய அரசு, கருப்பு பணத்தை ஒழிக்கும் தனது முயற்சியில் இருந்து பின் வாங்கவில்லை. புதியதாக டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்துள்ளது. பிட்காயின் வேறு, கிரிப்டோ கரன்சி வேறு. தற்போது அறிமுகம் ஆகி உள்ள மத்திய அரசின் டிஜிட்டல் கரன்சி வேறு.

இந்த டிஜிட்டல் கரன்சியை கையில் நோட்டுகளாக எடுக்கவே முடியாது. இந்த டிஜிட்டல் கரன்சி முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து விட்டால் தற்போதய கருப்பு பணம் முழுக்க இந்தியாவில் ஒழிக்கப்பட்டு விடும். புதிதாக கருப்பு பணத்தை சேர்க்கவும் முடியாது. காரணம் ஒவ்வொரு டிஜிட்டல் கரன்சிக்கும் தனித்தனி என்கிரிப்ட் நம்பர் இருக்கும். அதாவது ரூபாய் நோட்டுக்களில் உள்ளது போல் டிஜிட்டல் கரன்ஸியிலும் என்கிரிப்ட் நம்பர் இருக்கும். இதனை மாற்றவே முடியாது.

தவிர ஒவ்வொரு வர்த்தகத்திற்கும் இது பயன்படுத்தப்படும் போது, யாரிடம் இருந்து யாருக்கு செல்கிறது என்ற விவரம் முழுமையாக பதிவாகி இருக்கும். அதாவது எத்தனை லட்சம் கோடி பரிவர்த்தனைகள் நடந்தாலும், இதன் ஆதி முதல் அண்டம் வரை அறிய முடியும். இதனை திருட முடியாது. நேரடியாகவும் தவறான பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது.

ஒவ்வொரு பரிவர்த்தனையும் பதிவாகி விடும். ஒவ்வொருவரிடமும் எவ்வளவு மதிப்புள்ள டிஜிட்டல் கரன்ஸிகள் உள்ளன. அது எப்படி வந்து சேர்ந்தது என்ற முழு விவரமும் அரசின் கைகளில் இருக்கும். எந்த தவறுக்கும் இடம் அளிக்காது. இந்த டிஜிட்டல் கரன்சி பயன்பாடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் நாடு முழுவதும் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. அப்போ கருப்பு பணம், பதுக்கல் பணம், கள்ளப்பணம், வரி ஏய்ப்பு எந்த வேலைக்கும் இடம் இருக்காது.

இதனால் தான் ஒட்டுமொத்த உலகமும் டிஜிட்டல் கரன்சிக்கு மாறி வருகிறது. இதுவரை 10 நாடுகள் தங்கள் நாட்டு கரன்சியை டிஜிட்டலுக்கு மாற்றி உள்ளன. 50க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவை போல் சோதனை முயற்சியில் இறங்கி உள்ளன. மத்திய அரசின் இந்த முயற்சி வெற்றி பெற்றால், அது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாகவே அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Updated On: 17 Nov 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்