/* */

புலியிடம் சிக்கிய டிராகன்..! தோல்வி யாருக்கு?

Yuan Wang 5-இலங்கை ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் இருந்து இந்தியாவை உளவு பார்க்க வியூகம் வகுத்து கொடுத்த 2 சீன அதிகாரிகள் சஸ்பெண்ட்

HIGHLIGHTS

புலியிடம் சிக்கிய டிராகன்..!  தோல்வி யாருக்கு?
X

Yuan Wang 5-இலங்கை ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு வந்து நிற்கும் சீன உளவு கப்பல் யுவான் வாங் 5

Yuan Wang 5-இலங்கை ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு வந்து நிற்கும் சீன உளவு கப்பல் யுவான் வாங் 5 இந்திய அரசின் ராஜதந்திர நடவடிக்கைகளின் தோல்வி என்றும்.. மிகப்பெரிய வெற்றி என்றும் இரண்டு வகையான விவாதங்கள் சோசியல் மீடியாக்களை கலக்கிக் கொண்டு உள்ளன.

இதில் எது உண்மை.. என்றால் வெகு நிச்சயமாக இந்தியாவிற்கே வெற்றி என்று தாராளமாக அடித்து சொல்லலாம்.

எப்படி.. .ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை துரப்பணப்பணி மற்றும் மேம்படுத்தல்கள் செய்ய சீனாவிற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது ராஜபக்சே குடும்பம். இந்த துறைமுகத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் மேற்கொள்ள இருந்தது அகலப்படுத்தும் பணிகள். இதனை இலங்கை தடுத்து விட்டது. ஆனால் சீனா மேற்கொண்டது ஆழப்படுத்தும் பணி இதற்கு இலங்கை வழிவிட்டது.

இதனால் பொருட்செலவு ஏகத்துக்கும் எகிறியது. ஆனால் ராஜபக்ச குடும்பம் பெரியதாக கண்டு கொள்ளவில்லை மாறாக செலவிற்கு ஈடாக துறைமுகத்தையே கைமாற்றி கொடுத்து விட்டு பேசாமல் ஒதுங்கி கொண்டது.அதாவது அவர்கள் இந்த முறை ஆட்சிக்கு வந்ததே சம்பாதிக்க தான் என்கிற ரீதியில் செயல்பட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இந்த துறைமுகம் திறக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 13 கப்பல்கள் மாத்திரமே வந்திருக்கிறது அதில் 9 கப்பல்கள் மாத்திரமே சரக்குகளை கையாண்டு இருப்பதாக சொல்கிறார்கள்.பெருத்த நஷ்டத்தை சந்தித்து இருப்பதாகவும் சொல்கிறார்கள் இந்த துறைமுகத்தின் பொறுப்பு குழும அதிகாரிகள்.

பிறகு ஏன் இந்த துறைமுக மோகம் சீனாவிற்கு ⁉️ விஷயம் இருக்கிறது.

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள டிஜிஃபோர்டி துறைமுகத்தை சில நாட்களுக்கு முன்பாக முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள் சீனர்கள். இந்த துறைமுகம் தான் சீனாவின் முழுமையான சீனாவிற்கு வெளியே அமைந்துள்ள முதல் ராணுவ துறைமுகம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கிட்டதட்ட 20,000 சீன ராணுவ வீரர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் கண்காணிக்க முடியும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்..... இந்த துறைமுகத்தின் வழியாக இலங்கை ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு வந்து நிற்கும் சீன உளவு கப்பலை மின்னியல் பொறிமுறை மூலமாக இணைக்க... இணைத்து பார்த்து சோதிக்க.... சீனா ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவை பொறுத்தவரை இந்த ஆப்ரிக்கா டிஜிஃபோர்டி துறைமுகத்திற்கு அடுத்து ஓமான் துறைமுகத்திற்கு வடக்கே பாகிஸ்தான் குவாட்டர் துறைமுகம் வருகிறது. இவற்றை எல்லாம் ஒருங்கிணைப்பது மூலம் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து இந்துமகா சமுத்திரத்திற்கு வரும் அனைத்து கப்பல்களையும் தனது கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர முடியும் என நினைக்கின்றனர்.

ஆக... இந்த விஷயம் நம் இந்திய தேசத்தை தாண்டி மேற்கு உலக நாடுகளை... அவர்களின் கடல் சார் வணிகத்தை நேரிடையாக கண்காணிக்க ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்கள் சீனர்கள். சரி.. இந்தியா இவர்களை எப்படி கையாள்கிறது. தற்போதைக்கு அவர்கள் வெற்றி பெற்றுவிட்டது போலவும் சீனாவின் முழுமையான கண்காணிப்பு வளையத்தில் இந்திய பெருங்கடல் பிராந்தியம் வந்துவிட்டது போலவும் தோன்றும்.. ஆனால்..

இந்திய பெருங்கடலில் இந்தியாவின் கையே ஓங்கி இருக்கிறது இன்றளவும்.. நம் இந்திய தேசத்திற்கு இந்திய பெருங்கடலில், வெளியே அறிவிக்கப்பட்டாத இந்திய ராணுவ முகாம்கள் மூன்று இடங்களில் அமைந்து இருக்கிறது. அவை போக ஈரானிய சபஹார் துறைமுகம், மடகாஸ்கர் செஷன்ஸ் தீவுகளில் அருகில் பெயர் குறிப்பிடாமல் உள்ள துறைமுகம், கிருஸ்துமஸ் தீவு பகுதிகளிலும்,. ஆஸ்திரேலியா அருகில் பப்புவா நியூ கினி பகுதியில் நமது இந்திய ராணுவத்தினருக்கு சொந்தமான...( புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறோம்..) என பலமான பாதுகாப்பு அரண்களை ஓசைப்படாமல் ஏற்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.

Yuan Wang 5-இது அத்தனையும் மீறி சீனா ஒரு சிறிய இரும்பை அல்ல.. துரும்பை கூட கொண்டு சென்று விட முடியாது. அதன் பொருட்டே கள்ளத்தனமாக கச்சா எண்ணெயை கூட அவர்களால் இந்த பிராந்தியத்தில் கையாள முடிவதில்லை. சீனாவில் கட்டப்பட்ட சரக்கு கப்பல்கள் அனைத்தையும் இந்திய கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.. இந்த உலகில் உள்ள சரக்கு பெட்டகங்களில் 82% சீனாவில் கட்டப்பட்டது. மிக பெரிய வர்த்தக கப்பல்கள் அனைத்துமே சீனாவிற்கு சொந்தமானது.

கப்பல் நகர்வுகளை காட்டும் ரேடார் சாதனங்கள் அணைத்து விட்டு செல்ல நினைக்கும் கப்பல்களை அடுத்த பத்து நிமிடங்களில் இந்திய அதிகாரிகள் கேள்வி கேட்க அந்த இடத்தில் நிற்பதாக சொல்கிறார்கள்... அந்த அளவிற்கு மிகவும் முன்னேறிய விதத்தில் நம்மவர்கள் இயங்கி வருகிறார்கள்.

அப்படி என்றால் சீன உளவு கப்பல் யுவான் வாங் 5 வேலை...?

அவர்கள் வந்த நோக்கம் முழுவதுமாக பூர்த்தி அடையவில்லை என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.. குறிப்பிட்ட சில அலைவரிசையில் மாத்திரமே அவர்கள் இந்த இலங்கை ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் நிற்கும் நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.. கப்பலின் நகர்வுகளை காட்டும் ரேடார் சாதனங்கள் எப்போதும் இயங்கு நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.. துறைமுகத்திற்கு வடக்கே 120° பாகை வரையில் தங்களுடைய உளவு சாதனங்களை இயக்கக் கூடாது என்பது போன்ற கடுமையான நடத்தை விதிகளின் கீழ் இந்த கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு வந்திருக்கிறதே தவிர.. முழுவதுமான சுதந்திரத்தோடு இந்த சீன கப்பல் வரவில்லை என்கிறார்கள்.

இந்த கப்பலில் சுமார் இரண்டாயிரம் வீரர்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.. ஆனால் அவர்களை சீனா பணியாளர்கள் என்றே வகைப்படுத்தி அழைத்து வந்திருக்கிறது. இந்த கப்பலுக்கு விதிக்கப்பட்ட 120° பாகை கோணத்தில் தான் நமது இந்திய தேசம் வருகிறது. விதிகளை மீறும்.....?!?!. அப்படி செயல்படுமானால் இந்த கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேறும் சமயத்தில் அதனை நம்மவர்கள் கைப்பற்றி விடும் விதமாக விசாகப்பட்டினத்தில் இருந்து நமது இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றை அந்த பிரதேசத்தில் நிலைநிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

தவிர நம்மவர்களின் நுட்பமான உளவு சாதனங்களுடன் தயார் நிலையில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய பாகிஸ்தான் போருக்கு பிறகான முழுமையான ஓர் பயிற்சியாக இதனை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்த கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டா துறைமுகத்தை விட்டு வெளியேறி நேராக ஆப்ரிக்கா டிஜிஃபோர்டி துறைமுகம் தான் செல்ல இருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்..அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்திய கடற்கரை நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் பிராந்தியம் மட்டுமல்லாமல் அரபிக் கடலிலும் பலமான பாதுகாப்பு முறைமைகளை ஏற்படுத்தி வைத்து இருக்கிறார்கள் நம்மவர்கள். போதை லாகிரி வஸ்துக்கள்.. மற்றும் கள்ளத்தனமாக சீனாவிற்கு கடத்தப்படும் தங்கத்தை முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் இந்த முயற்சி சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம் சீனா,ஆப்பிரிக்க மற்றும் ஆஃப்கன் போதை வஸ்துக்களை மருந்து மாத்திரைகள் என்கிற பெயரில் ஐரோப்பிய நாடுகளின் ஊடாக அமெரிக்கா வரை கொண்டு சென்று கொழுத்த டாலர்களை வருவாயாக ஈட்டி வருகின்றனர். கனடாவில் அவற்றை சூதாட்டம் போன்ற இடங்களில் புழக்கத்தில் விட்டு அவற்றைக் கொண்டு பல இடங்களை வளைத்து போட்டு வருகிறார்கள்... சட்ட விதிகளின்படி கனடாவில் உள்ள பல அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளை சீனா மறைமுகமாக சூரையாடிக்கொண்டு இருக்கிறது.

இந்தியாவை சுற்றி உள்ள இலங்கை பாகிஸ்தான் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளை தங்கள் பணப்பலத்தை கொண்டு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சீனாவிற்கு தன் பட்டு பாதை திட்டம் மூலம் இடையே உள்ள நாடுகளில் இந்தியா பெரும் அளவில் நலத் திட்ட உதவிகளை செய்து கொண்டு வருகிறார்கள். காலப் போக்கில் ஆஃப்கானிஸ்தானை போல ஆப்ரிக்கா நாடுகள் பலவும் சீனாவின் பட்டுப் பாதை திட்டத்தில் இருந்து முழுமையாக ரத்து செய்து விட்டு வெளியேறி வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க.. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை பாகிஸ்தானுக்கான அமெரிக்க நிதியுதவிகளை இந்திய தலையீடு காரணமாக முழுமையாக ரத்து செய்து இருக்கிறார்கள். தவிர அமெரிக்க நிதியுதவி பெற்றவர்களை கொண்டே சீனர்களை இந்த பிராந்தியத்தில் இருந்து அகற்றிட காரியங்கள் வேக வேகமாக நடைபெற்று வருகின்றன. இதில் 65% பணிகள் முடிவடைந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்ததாக மாலத்தீவு முதற்கொண்டு நேபாளம் ஊடாக திபெத்திய பிராந்தியத்தையும் பூட்டான், பங்களாதேஷ் மற்றும் மியான்மார் வரையிலும் இந்திய பங்களிப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிராந்தியத்தில் வளர்ச்சி கண்டு வரும் மலேஷியா சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஒருங்கிணைத்து ராணுவ ஒத்திகை மற்றும் ஆயுத தளவாட விநியோக சங்கிலியை இந்திய அரசு தரப்பில் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆக மொத்தத்தில் முழுமையான ஓர் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்று இருக்கிறோம். போதாக்குறைக்கு உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் உணவு பொருட்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அரசு தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.. இப்போது இலங்கை துறைமுகத்தில் சீன கப்பலை நிறுத்தி உளவு பார்க்க வியூகம் வகுத்து கொடுத்த இரண்டு அதிகாரிகள் மீது சீன அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம் இலங்கையில் நடைபெறும் தொழி்ல்நுட்ப போரில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளது என்பது புரிகிறது.

இதே அளவில்..சீரான வேகத்தில் இந்தியா நடைபோடுமானால் இந்த பிராந்தியத்தில் அசைக்க முடியாத சக்தியாக இந்தியா மாபெரும் வளர்ச்சி காணும். அப்படி இந்தியா வருவது.. வளர்வது.. தங்களுக்கு நல்லது என மேற்கு உலக நாடுகள் நம்ப ஆரம்பித்து இருப்பதாக சொல்கிறார்கள். இஃது இந்தியா மீதான பாசத்தால் அல்ல.. அவர்களுக்கு சீனா மீதுள்ள பயத்தால்..

Yuan Wang 5-ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் நம்மவர்கள் (இந்தியாவின் தேசிய விலங்கு புலி) அந்த டிராகனையே ஒற்றை ஆளாக மடக்கி பிடித்து வெற்றி கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. இது நிரந்தரமாக..... நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க வேண்டியிருக்கிறது.. அதுவும் நம் இந்திய மக்கள் கைகளில் தான் இருக்கிறது.

Updated On: 23 Aug 2022 8:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  5. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  6. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  7. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  8. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  9. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  10. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...