/* */

தமிழக விவசாயிகளின் கையெழுத்து இயக்கம் தடுத்து நிறுத்த கேரளா முயற்சி

தமிழக விவசாயிகளின் கையெழுத்து இயக்கத்தை தடுத்து நிறுத்த கேரளா முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

HIGHLIGHTS

தமிழக விவசாயிகளின் கையெழுத்து இயக்கம்  தடுத்து நிறுத்த கேரளா முயற்சி
X

முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள மாநிலத்தில் சேவ் கேரளா அமைப்பு தவறான பல பிரச்சாரங்களை செய்து, 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று வருகிறது. இதற்கு பதிலடியாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம், மக்களை நேரடியாக சந்தித்து, முல்லைப்பெரியாறு அணை பற்றிய உண்மைகளை எடுத்துக் கூறி ஒரு கோடிபேரிடம் கையெழுத்து வாங்க உள்ளனர். வரும் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குமுளி, சிவகங்கை, ராமநாதபுரத்தில் ஒரே நேரத்தில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளது. கிராமம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அத்தனை பேரும் மக்களிடம் கையெழுத்து வங்க உள்ளனர். இதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு படிவங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் கையெழுத்து இயக்கத்தில் கேரளா மொழிவாரி பிரிவினையின் போது தன்னுடன் இணைத்துக் கொண்ட தமிழக பகுதிகளான பீர்மேடு, தேவிகுளம், உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக இடம் பெறுகிறது. இதனை அறிந்த கேரள தமிழர்கள் குறிப்பாக இடுக்கி தமிழர்கள் தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதோடு, நேரடியாக பங்கேற்பதாகவும் அறிக்கைகள் விடுத்து வருகின்றனர். தமிழகம், கேரளாவில் பெருகும் ஆதரவு கேரள அரசுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தவிர இடுக்கி மாவட்ட தமிழர்களின் ஆதரவு, அந்த மாவட்டத்தில் தமிழர்கள் மற்றும் மலையாளிகள் இடையே மோதலை உருவாக்கலாம் என உளவுத்துறையும் கேரள அரசை எச்சரித்துள்ளது. இதனால் கேரள உளவுத்துறை மத்திய உளவுத்துறையுடன் இணைந்து தமிழக விவசாயிகளின் கையெழுத்து இயக்கத்தை நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். கேரள போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இது குறித்து முல்லைப்பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம், மாவட்ட செயலாளர் விஜய்மாரீஸ், மாவட்ட துணை செயலாளர் ராதாகணேஷ் ஆகியோர் கூறியதாவது:-

நாங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டால் எங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுங்கள். கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இது போன்ற எல்லை பிரிவினை பிரச்சினைகள் உள்ளன. அங்கெல்லாம் வராத மோதல் இங்கு எப்படி வரும். அதுவும் கேரளாவில் மேற்கொள்ளப்படும் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக நடக்கும் தவறான துஷ்பிரச்சாரங்களை நிறுத்த யாரும் முன்வரவில்லை. எங்களை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள். அதாவது தவறாக செயல்பட்டு பொய் தகவல் பரப்புவர்களை மத்திய, மாநில அரசின் உளவுத்துறைகள் ஊக்குவிக்கின்றன. நியாயம் கேட்பவர்களை முடக்க நினைக்கின்றனர். இது எப்படி சரியாகும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தெளிவான ஒரு நடைமுறையினை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர். அதனை ஏற்காமல் கேரளாவில் தவறான பிரச்சாரம் நடப்பதால் தான் நாங்களும் போராட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அவர்களை நிறுத்தச்சொல்லுங்கள். நாங்களும் நிறுத்திக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Updated On: 12 July 2022 5:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  2. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  3. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  5. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...
  6. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  7. வீடியோ
    இந்திய தேர்தலைக் காண வந்துள்ள உலகளாவிய பிரதிநிதிகள் குழு...
  8. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  9. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  10. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...