/* */

'உண்மையான உழைப்பே பணம்' - பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன 'பொருளாதார மேதை' பெருந்தலைவர் காமராஜர்

‘உழைக்காமல் உண்பவனை திருடன் என்றுதான் சொல்ல வேண்டும்’ என்றார் மகாத்மா காந்தி. ‘உண்மையான உழைப்புதான் பணம்’ என அன்றே சொல்லி இருக்கிறார் பெருந்தலைவர் காமராஜர்.

HIGHLIGHTS

உண்மையான உழைப்பே பணம் - பல ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன பொருளாதார மேதை பெருந்தலைவர் காமராஜர்
X

படிக்காத மேதை ‘ காமராஜர்’ (கோப்பு படம்)

அமெரிக்காவிலும், மேற்கு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகளவில் நோட்டுகளை அச்சிட்டு மக்களுக்கு வழங்கினர். அப்போது இந்தியாவில் மட்டும் மக்களுக்கு பணமாக எதுவும் தராமல், அவர்களுக்கு தேவையான உணவு, அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் இலவசமாக வழங்கியது. அதேபோல் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக போட்டது. பணம் எதையும் மக்களிடம் தரவில்லை. இது மிக சிறந்த பொருளாதார மேலாண்மை. இதனால் இந்திய பொருளாதாரம், தற்போது திடமாக உள்ளது. உலக நாடுகளின் பொருளாதாரம் சிக்கலில் தவிக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்போது பொருளாதார வல்லுநர்கள் கூறும் கருத்துக்களை முன்னாள் முதல்வர் காமராஜர் ஏற்கனவே மக்களுக்கு தெளிவுபடுத்தி விட்டார். அந்த சுவாராசியமான நிகழ்வை பார்க்கலாம்.

பெருந்தலைவர் காமராஜர், தமிழகத்தின் முதல்வராக இருந்த காலத்தில், தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி...

நிகழ்ச்சியில் பங்கேற்ற, 'படிக்காத மேதை' காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியதாவது ....

''நாட்டுல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்..... ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க...எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை.... பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு..... எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்... அடிச்சு உங்கள் இஷ்டப்படியே, ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்... இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது....

கொஞ்ச நாள் கழிச்சு, கடைத்தெரு பக்கம் போனீன்னா, எல்லா கடையும் பூட்டி கெடக்கும்...அரிசி, பருப்பு, உப்பு, புளி, மொளகா, எண்ணெய் -ன்னு ஒண்ணும் கெடைக்காது....விவசாய வேலைக்கு ஆள் வராது... ஒரு வேலைக்கும், ஒருத்தனும் வரமாட்டான்...எப்படி வருவான்னேன்.....?

பணம் வேணும்னு உழைக்கிறாங்க....கட்டு கட்டா பணம் இருக்கும் போது, எவன்தான் வேலைக்கு வருவான்...? பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈரத் துணியை போட்டு கிட்டு கெடக்க வேண்டியது தான்...! ஊரே தூக்கம் வராம கெடக்கும்....இப்போ அது மதிப்புள்ள பணம், காசு இல்லை.... வெத்து பேப்பர்தான்னேன்....உழைப்பு தான் பணம்ன்னேன்...

பொருளாதாரத்திற்கு ஆதாரமே உழைப்புதான்.... உழைப்பு இல்லாமல் ஒண்ணுமே கெடைக்காது.... ஒண்ணுமே கெடையாது....

இப்ப தெரிஞ்சுதா...? உழைப்பு இல்லாமல், கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்..."

இது பொருளாதார படிப்பு படிக்காமல், நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படித்த ஒரு பாமர மனிதன், படிக்காத மேதை ... சொன்னது.....மாதம்தோறும் உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும், இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும் ? என்று படிக்காத மேதை காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.

இதனைத்தான் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா காலத்தில் பின்பற்றியது. ஆனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் உள்ள கட்சிகள், இன்னமும் இலவசம், மாதந்தோறும் பணம் தருவது போன்ற திட்டங்களை அறிவித்து வருகின்றனர். இது போன்று இலவசமாக பணம் வழங்கும் திட்டத்தை அறிவிக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது. தற்போது மேற்கு நாடுகளின் நிலைமை நமக்கு பாடம் புகட்டுவதாக உள்ளது. அதனால் கண்டபடி தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கும் தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் இனியாவது திருந்த வேண்டும்.

Updated On: 12 Oct 2022 5:10 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?