/* */

தேனி மாவட்டத்தில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
X

தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. இன்று காலையில் இருந்தே லேசாக வெயில் அடித்து வந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்யத் தொடங்கியது.

தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், போடி, பெரியகுளம் மற்றும் தேனி உள்ளிட்ட இடங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதில் தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, கருவேல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது.மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 15 April 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  3. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  4. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  7. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  8. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்