/* */

பாரத பிரதமரின் சிறு, குறு தொழில் கடன் திட்டம்

சிறு, குறு, உற்பத்தி, சேவை வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10,00,000/- வரை சொத்து பணயம் இல்லா வங்கி கடன்பெறலாம்.

HIGHLIGHTS

பாரத பிரதமரின் சிறு, குறு தொழில் கடன் திட்டம்
X

முத்ரா யோஜனா திட்டம் மூன்று வகைகளில் குறுந்தொழில் முனைவோருக்கு, தங்களின் தொழிலை மேம்படுத்தவும், விரிவு படுத்தி கொள்ளவும் கடன்களை வழங்குகிறது.

சிசு (SHISHU): Rs.50,000 வரை கடன்.கிஷோர் (KISHOR) : ரூ. 50,000 முதல் ரூ. 5,00,000 வரை கடன்.தருண் (TARUN) : ரூ. 5,00,000 லட்சம் முதல் ரூ. 10,00,000 லட்சம் வரை.முத்ரா கடன் திட்டத்தை யாரெல்லாம் பயன்படுத்தலாம்:

உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். உதாரணமாக சரக்குகளை எடுத்து செல்ல வாகனம் வாங்குவதற்கு, முடிதிருத்தும் நிலையம் மேம்படுத்த, பியூட்டி பார்லர் மேம்படுத்த, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் கடை விரிவு படுத்துதல், சிற்றுண்டி உணவு கடைகள், தள்ளுவண்டி காய்கறி பழ கடைகள், துணி கடைகள், கோழிப் பண்ணை, மாடு வளர்த்தல், மீன் பண்ணை, தேனீ வளர்த்தல், பால் பண்ணை, பட்டு தொழில், பேக்கரி கடைகள் விரிவுபடுத்துதல், ஏஜென்சீஸ் வைத்தல், வாகனம் ஓட்டுபவர், கைவினை கலைஞர், உற்பத்தி தொழிற்சாலை அமைத்தல் மற்றும் பல.

கடன் பணமாக கிடைக்காது. பொருள், இயந்திரம், உபகரண பொருட்கள், சரக்கு வண்டி என அனைத்திற்கும் விலைபட்டியல் (Quotation) கொடுக்க வேண்டும்.முத்ரா கடன் தகவல்கள்: வயது வரம்பு 18 வயது முடிந்திருக்க வேண்டும். முத்ரா கடனுக்கு 12% வரை வட்டி நிர்ணயிக்கப்படும். கடனை 5 வருடம் வரை EMI முறையில் திருப்பி செலுத்தலாம்.

அனைத்து வங்கிகளிலும் கடன் பெறலாம். உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியிலேயே முயற்சிக்கவும். இந்த முத்ரா கடன் திட்டத்திற்கு கால நிர்ணயம் இல்லை, வருடம் முழுவதும் வங்கிகள் கடன் பெறலாம்.

முத்ரா கடன் வழங்கும் வங்கிகள்:Public Sector Banks, Private Sector Banks, Regional Rural Banks (RRBs), Co-operative Banks, Micro Finance Institutions (MFIs) & Non Banking Financial Companies

தேவைப்படும் ஆவணங்கள்:அடையாள சான்று,இருப்பிட சான்று,புகைப்படம் ,இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசிது ( Quotation )தொழிற்சாலை இருக்கும் இடம் மற்றும் அரசாங்க பதிவு சான்று,சாதி சான்று,வருமான வரி சான்று, திட்ட அறிக்கை.

திட்டம் பெறும் முறை: அருகில் உள்ள வங்கி ( Or ) www.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக ( Or ) பொது சேவை மையம் E Seva Center மூலம் பதிவு செய்யலாம் என மாநில செயலாளர்,மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு, சரவணன் நாகராஜ் தகவல் தெரிவித்தார்.

Updated On: 2 Oct 2022 9:30 AM GMT

Related News