/* */

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க  தடை
X

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

கோடை காலம் என்பதால் கடந்த சில மாதங்களாக கும்பக்கரை அருவியின் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கொடைக்கானல் வனச்சரகர் டேவிட் தடை விதித்துள்ளார்.அருவியின் நீர்வரத்து சீராகும் வரையில் தடை நீடிக்கும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். கோடையில் அருவியில் குளித்து குதூகலிக்கலாம் என்று கும்பக்கரை வந்த சுற்றுலா பயணிகள் தடையால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Updated On: 15 April 2021 11:10 AM GMT

Related News