/* */

கேரள அரசின் அடாவடித்தனமும் அத்துமீறல்களும்: மீண்டும் பற்றிக்கொள்ளும் முல்லைபெரியாறு விவகாரம்

முல்லை பெரியாறு அணையில் கேரள அரசின் அத்துமீறல் போக்கினை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

கேரள அரசின் அடாவடித்தனமும் அத்துமீறல்களும்: மீண்டும் பற்றிக்கொள்ளும் முல்லைபெரியாறு விவகாரம்
X

முல்லை பெரியாறு அணையில் இன்று ஆய்வு செய்த ஐவர் குழுவினர்.

கேரள அரசின் அடாவடி நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க தமிழக விவசாயிகள் வரிந்து கட்டி களம் இறங்கி உள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளுடன் கை கோர்த்துள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் மவுனம் கேரளாவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு வழங்கி உள்ள நிலையில், கேரள அரசு பல்வேறு சட்ட குளறுபடிகளை காரணம் காட்டி, அணை நீர் மட்டம் 138.70 அடியை தொட்ட நிலையில் கேரளா வழியாக தண்ணீர் திறந்தது.

அணையின் முழு கட்டுப்பாடும் தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் போது, தேனி கலெக்டரை மீறி எப்படி தண்ணீர் திறக்கப்பட்டது என தமிழக விவசாயிகளின் கோபம் தமிழக அரசு மீது திரும்பியது. சுதாரித்துக் கொண்ட தமிழக அரசு தேனி மாவட்டத்தில் உள்ள தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வழியாக தமிழக விவசாயிகளின் கருத்துக்களை தெரிந்து கொண்டு மவுனம் காக்கிறது.

இந்நிலையில் அடுத்தடுத்து வேகமாக செயல்பட்ட தமிழக விவசாயிகள் ஐந்து மாவட்ட விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்தனர். லோயர்கேம்ப்பில் நவம்பர் முதல் தேதி பற்றிய போராட்ட தீ, இன்று இரண்டாவது நாளாகவும் நீடித்தது. இதனால் லோயர்கேம்ப்பில் தேனி மாவட்ட காவல்துறை நிரந்தரமாக போலீசாரை நிறுத்தி உள்ளது. முல்லைபெரியாறு இன்று முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்த ஐவர் குழுவும் தண்ணீர் கேரளா வழியாக வெளியேறியதை பற்றி வாய் திறக்கவில்லை. இது தமிழக விவசாயிகளை மேலும் உசுப்பேற்றியது.

மேலூர் விவசாயிகள் சங்கம் முதல் போராட்ட அறிவிப்பினை இன்று மதியம் வெளியிட்டது. அடுத்து மதுரை விவசாய சங்கத்தினர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர். அடுத்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர்.


சுதாரித்துக் கொண்ட அ.தி.மு.க., அவசரமாக தேனியில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி தாங்களும் கேரளாவின் அடாவடியை கண்டித்து நவ.,9ல் போராட போவதாக அறிவித்துள்ளது. பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் நவ.,8ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். ஆக நவ.,7ம் தேதி முதல் நவ.,12ம் தேதி வரை தொடர்ச்சியான போராட்ட அறிவிப்புகளை இதுவரை வெளியிட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் மீண்டும் 2011 திரும்பி விடுமோ என கேரள அரசு கலக்கத்தில் உள்ளது.

2011ம் ஆண்டு முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரளாவிற்கு எதிராக தேனி மாவட்ட விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. ஜெயலலிதா விவசாயிகளை போராட விட்டு, பிரச்னையை விட்டுப்பிடித்தார். ஒரு கட்டத்தில் ஜெ.,வால் கட்டுப்படுத்த முடியாத அளவு போராட்டம் வெடிக்கவும் கேரள அரசு தனது பிடிவாதத்தை விட்டு இறங்கி வந்தது. அதன் பின்னரே தேனி மாவட்ட விவசாயிகள் அமைதியாகினர்.

இப்போது தேனி மட்டுமல்ல, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளும் களம் இறங்குகின்றனர். இது குறித்து கேரள உளவுத்துறை கொடுத்துள்ள தகவல் கேரள அரசை மிகவும் கலங்கடித்துள்ளது. முதல்வர் ஜெ., பாணியில் ஸ்டாலினும் விவசாயிகளை முன்நிறுத்தியே கேரளாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளார் என கேரள உளவுத்துறை அம்மாநில அரசுக்கு தெளிவான அறிக்கையே அனுப்பி உள்ளது.

இதனால் பிரச்னையின் தீவிரம் இனி எந்த திசையில் எவ்வளவு வேகமாக பயணிக்க போகிறது. அதனை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என கேரள அரசு சற்று கலக்கத்தில் தான் உள்ளது. கேரள அரசு விரித்த வலையில் அவர்களே சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர் என தேனி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Updated On: 4 Nov 2021 1:35 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்